வேஸ்ட்டிலையும் வெள்ளை குர்தாலையும் அம்பானி பங்க்ஷனில் ரஜினி.. மகளுக்காக போடும் பிள்ளையார் சுழி

Actor Rajini: ரஜினி நடிப்பில் தற்போது வேட்டையன் படப்பிடிப்பு மிக மும்மரமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த மாதத்திற்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்து லோகேஷ் இயக்கத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இந்த சூழ்நிலையில் ரஜினி குடும்பத்துடன் குஜராத் போயிருக்கிறார். அதாவது தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரன் மெர்சண்டின் மகன் ராதிகா மெர்சன்ட்-க்கு ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

அந்த வகையில் தற்போது மார்ச் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை ஃப்ரீ வெட்டிங் சூட் நிகழ்ச்சி ஜாம்நகர் இடமே களைகட்டும் அளவிற்கு கோலாகலமாக நடந்திருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பாலிவுட் பிரபலங்கள் பலரும் போயிருக்கிறார்கள். அந்த வகையில் கோலிவுட்டில் இருந்து அட்லீ குடும்பத்துடன் இரண்டு தினங்களுக்கு முன்பு போயிருந்தார்.

இவரை தொடர்ந்து ரஜினியும் மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் நேற்று போய் இருக்கிறார். பொதுவாக அம்பானி வீட்டில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால் பாலிவுட் பிரபலங்கள் மட்டுமே அதிகமானோர் கலந்து கொள்வார்கள். அடுத்ததாக ரஜினியும் அங்கே முக்கிய பிரபலமாக எண்ட்ரி கொடுப்பார். அந்த வகையில் இவர்களுடைய நட்பு ரொம்பவே வலுவாக இருந்தது.

rajini family
rajini family

Also read: சத்தமே இல்லாமல் சினிமாவில் களமிறங்கிய ரஜினியின் வாரிசு.. நடிப்பை தாண்டி கையில் எடுக்கும் ஆயுதம்

இந்நிலையில் இந்த திருமண நிகழ்ச்சியில் மகளை கூட்டிட்டு போய் அங்கே அனைவருக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக ரஜினி முயற்சி எடுத்திருக்கிறார். அதாவது அம்பானி வீட்டிற்கு கண்டிப்பாக பாலிவுட் பிரபலங்கள் நிறைய பேர் வருவார்கள். அவர்களிடம் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை இயக்குனராக அறிமுகப்படுத்திவிட்டால் அங்கே மகளுக்கு ஒரு எதிர்காலம் கிடைக்கும்.

அதன் மூலம் பாலிவுட்டில் தொடர்ந்து மகள் ஜெயிப்பதற்கு வாய்ப்புண்டு என்பதற்காக இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் பிள்ளையார் சுழி போட்டு ரஜினி ஆரம்பித்து வைத்து விட்டார். இதனால் அங்கு இருப்பவர்கள் அனைவரிடமே ரஜினி அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை அறிமுகப்படுத்திவிட்டார். ஏற்கனவே அட்லி இப்படித்தான் போய் பாலிவுட் பிரபலங்களை மடக்கி விட்டார்.

தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-கும் அதே மாதிரி ஒரு வாய்ப்பு வருவதற்காக இப்படி பண்ணி இருக்கிறார். ஏனென்றால் தமிழ் சினிமாவில் இவர் எடுத்த படங்களுக்கு பெருசாக வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் இங்கே இனி இயக்குவது சரிப்பட்டு வராது என்று பிளான் பண்ணி பாலிவுட் பக்கம் தன்னுடைய மகளை அனுப்ப திட்டம் போட்டு விட்டார்.

Also read: 12 ஏக்கர் நிலத்தை பதிவு செய்து தியாகம் செய்த ரஜினி.. அரசியல் கட்சிகளை வாயடைக்க வைத்த சம்பவம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்