ஒரே மாதத்தில் ரிலீசான 4 படங்கள்.. ராஜ்கிரண் உடன் மல்லுக்கட்ட முடியாமல் தோற்றுப் போன ரஜினி

பொதுவாகவே சினிமாவில் எந்த படங்கள் ரிலீஸ் ஆகினாலும் அதற்கு போட்டியாக வேறொரு படமும் ரிலீஸ் ஆவது காலம் காலமாக இருந்து வருகிறது. அப்படித்தான் ஒரே மாதத்தில் ரிலீஸ் ஆன நான்கு படங்கள் போட்டி போட்டுக் கொண்டு மோதி இருக்கிறது. அதிலும் ஏப்ரல் மாதத்தை குறி வைத்து வந்திருக்கிறது.

ஏனென்றால் அப்பொழுது தான் கோடை விடுமுறை என்பதால் வசூலை அள்ள முடியும் என்பதற்காக. அப்படி போட்டி போட்டுக்கொண்டு வெளியில் வந்த படங்களில் ராஜ்கிரன் படத்துடன் மல்லு கட்ட முடியாமல் தோற்றுப் போய் இருந்தார் ரஜினி. அது என்னென்ன படங்கள் என்று பார்க்கலாம்.

Also read: நடிப்புக்கு இணையாக பாராட்டை பெற்ற கிஷோர் குமாரின் 5 படங்கள்.. ரஜினியே வியந்து பார்த்த நடிப்பு

என் ராசாவின் மனசிலே: கஸ்தூரிராஜா இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு என் ராசாவின் மனதிலே திரைப்படம் வெளிவந்தது. இதில் ராஜ்கிரண், மீனா, ஸ்ரீவித்யா மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இதில் ராஜ்கிரண் முரட்டுத்தனமாக அடாவடி செய்திருப்பார். இவரை பார்த்து பயப்படும் மீனா ஒரு கட்டத்தில் ராஜ்கிரனை திருமணம் செய்து கொண்டதால் இவருடைய வாழ்க்கை எப்படி அமைகிறது என்பது தான் கதை. இப்படம் அதிகளவில் பாராட்டைப் பெற்று வெள்ளி விழா கொண்டாடிய படமாக வெற்றி பெற்றது.

சின்னத்தம்பி: பி வாசு இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு சின்னத்தம்பி திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரபு, குஷ்பூ, மனோரமா, ராதாரவி மற்றும் கவுண்டமணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் பிரபு வெகுளியாக நடிக்கும் எதார்த்தமான கேரக்டராகவும் இவரை பார்த்து காதலில் விழும் குஷ்பூ யாருக்கும் தெரியாமல் தாலி கட்டிக் கொள்வதும் அதன்பின் வரும் பிரச்சனைகளை சமாளிக்கும் விதமாக கதை அமைந்திருக்கும். இப்படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாகவும் ஒன்பது திரையரங்கில் 356 நாட்கள் ஓடி மற்றும் 47 திரையரங்கில், 100 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.

Also read: முழு அனுபவத்தால் ரஜினி ரிஜெக்ட் செய்த 4 இயக்குனர்கள்.. கமலுக்கு வாரி இறைச்ச சூப்பர் ஹிட் படம்

கேப்டன் பிரபாகரன்: ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு கேப்டன் பிரபாகரன் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், ரூபிணி, சரத்குமார், மன்சூர் அலிகான் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன் என்ற கேரக்டரில் மக்கள் சித்திரவதை செய்யும் வீரபத்திரனை பிடிக்கும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும். இப்படம் விஜயகாந்தின் 100வது படமாகும் அதன் பிறகு விஜயகாந்துக்கு கேப்டன் என்ற பெருமையை பெற்றுக் கொடுத்தது.

நாட்டுக்கு ஒரு நல்லவன்: வி.ரவிச்சந்திரன் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு நாட்டுக்கு ஒரு நல்லவன் திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினிகாந்த், ஜூஹி சாவ்லா, குஷ்பூ, ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது உறுப்பு மற்றும் அறுவை சிகிச்சை செய்து மோசமான கும்பலை கண்டுபிடிக்கும் விதமாக நேர்மையான போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்திருப்பார். இப்படம் மிக மோசமாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.

இப்படி ஒரே மாதத்தில் வெளிவந்த நான்கு படங்களில் மிக மோசமாக தோல்வி அடைந்தது ரஜினியின் நாட்டுக்கு ஒரு நல்லவன் படம் தான். மற்ற மூன்று நடிகர்களின் படங்கள் அதிக நாட்களில் திரையரங்குகளில் ஓடி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வசூலில் சாதனை குவித்தது.

Also read: வில்லனாய், ரஜினியை குடைச்சல் கொடுத்த நடிகர்.. பொறாமை பட வைத்த நாசர்

- Advertisement -