அண்ணாச்சியை விட மோசமாக கலாய்க்கப்பட்ட ரஜினி.. திரும்பி கூட பார்க்காத இளைய தலைமுறை

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த தி லெஜன்ட் திரைப்படம் பலராலும் கலாய்த்து தள்ளப்பட்டது. மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் போட்ட பணத்தில் பாதியை கூட வசூலிக்கவில்லை. அதிலும் அண்ணாச்சியின் நடிப்பை பார்த்து கிண்டல் செய்யாத ஆட்களே இல்லை என்று சொல்லலாம்.

அந்த அளவுக்கு அந்த திரைப்படம் இந்த வருடத்திலேயே அதிக அளவு கலாய்க்கப்பட்ட திரைப்படமாக இருக்கிறது. தற்போது அந்தப் படத்தைக் காட்டிலும் ரஜினி நடித்த பாபா திரைப்படம் அதிகமாக கேலியும், கிண்டலும் செய்யப்பட்டு வருகிறது. 20 வருடங்களுக்கு முன்பு ரஜினியின் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் தற்போது அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு மீண்டும் வெளியானது.

Also read: 2ம் பாகம் வரப்போகுதா.? பாபா ரீ ரிலீஸ் ஒரு விமர்சனம்

புதுப்பொலிவுடன் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் அனைவரையும் வியக்க வைத்த நிலையில் இதன் சாதனையும் நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ரீ ரிலீஸ் எதிர்பார்த்த அளவு இன்றைய தலைமுறை ரசிகர்களை கவரவில்லை. அதாவது இந்த திரைப்படம் இந்த காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் இல்லை என்பது தான் இளைஞர்களின் கருத்தாக இருக்கிறது.

அந்த வகையில் இந்த திரைப்படத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு ரசித்து கொண்டாடிய ரசிகர்கள் தான் இப்போதும் ஆர்வத்துடன் பார்த்தனர். அவர்களுடைய எண்ணிக்கை மட்டுமே தியேட்டர்களில் அதிகமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் படத்தில் இடம்பெற்று இருந்த சில காட்சிகள், அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்கள், ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள் இப்படி எதுவும் ரசிகர்களை கவரவில்லை.

Also read: பாபா ரீ-ரிலிஸில் மாற்றப்பட்ட முக்கியமான காட்சிகள்.. கிளைமாக்ஸில் வைத்த அதிரடி ட்விஸ்ட்

அந்த காலகட்டத்தில் ரஜினிக்கு வேற லெவல் மாஸ் இருந்தது. இப்பவும் அந்த மாஸ் குறையாமல் தான் இருக்கிறது. ஆனால் இன்றைய தலைமுறைகள் அவரிடம் எதிர்பார்ப்பதே வேறு. அப்படி இருக்கும் சூழ்நிலையில் இந்த படத்தின் ரீ ரிலீஸ் பற்றி பெரிய அளவில் யாரும் ஆர்வம் காட்டவில்லை என்பதே உண்மை. அதனாலேயே படத்தின் வசூலும் ஒரு கோடியை கூட தாண்டவில்லை.

மேலும் சோசியல் மீடியாவில் இந்த படத்திற்கு ஏகப்பட்ட அலப்பறைகள் கொடுக்கப்பட்டது. அதை வைத்து பார்க்கும் போது இந்த வசூல் நிச்சயம் எதிர்பார்க்காதது தான். அது மட்டுமல்லாமல் இந்த படம் வெளியானதற்கு பதிலாக ரஜினியின் பாட்ஷா திரைப்படம் வெளியாகி இருந்தால் மாஸாக இருந்திருக்கும் என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also read: மாண்டஸ் புயலை ஓரங்கட்டிய சூப்பர் ஸ்டார்.. 20 வருடங்களுக்கு பிறகும் வரலாறு படைக்குமா பாபா ரீ ரிலீஸ்?