150 கோடி வீடு, மகள்களுக்குள் ஏற்பட்ட சொத்து தகராறு.. விழிபிதுங்கி நிற்கும் ரஜினி

சூப்பர் ஸ்டார் வீடு பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு பூகம்பமே வீசிக் கொண்டிருக்கிறதாம். வீட்டிற்குள்ளேயே நிம்மதி இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் ரஜினி மிகவும் அப்செட்டில் உள்ளாராம்.

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக 70 வயதிலும் கெத்துக் காட்டி வருகிறார் ரஜினி. இப்போதெல்லாம் ரஜினி நடிக்கும் ஒரு படத்திற்கு அவர் வாங்கும் சம்பளம் நூறு கோடி என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். சூப்பர் ஸ்டாருக்கு சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா என்ற இரு மகள்கள் உள்ளது தெரிந்ததே. அதில் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து அவர் தான் வேண்டும் என அடம் பிடித்து திருமணம் செய்து கொண்டார்.

அதேபோல் சவுந்தர்யா அஸ்வின் என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டு சில வருடங்கள் வாழ்க்கை நடத்திவிட்டு பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்து இரண்டாவதாக விசாகன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு தற்போது வாழ்ந்து வருகிறார்.

என்னதான் ஐஸ்வர்யா ரஜினியை தாங்கு தாங்கு என்று தாங்கினாலும் அவர்களுக்கு அவரது இளைய மகளை தான் மிகவும் பிடித்துள்ளது. தற்போது ரஜினியின் வீடு யாருக்கு சொந்தம் என்ற பஞ்சாயத்து ஏற்பட்டுள்ளதாம். ரஜினி மற்றும் லதா இருவருக்குமே அந்த வீட்டை இளைய மகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் ஆசையாம்.

ஆனால் தனுஷ் தற்போது ஹாலிவுட் சினிமா வரை பிரபலமான நடிகராக இருப்பதால் ரஜினியின் வீடு கிடைத்தால் இன்னும் அவரது மாஸ் கூடுமென ஐஸ்வர்யா அவரது வீட்டுக்கு அடி போட்டுள்ளார். இந்த பிரச்சனை ஒரு கட்டத்தில் பூதாகரமாக வெடிக்க ரஜினியோ இளைய மகளுக்கு தான் இன்று நான் தங்கியிருக்கும் வீடு என ஓபன் ஆக சொல்லிவிட்டாராம்.

இதனால் அதிருப்தி அடைந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்துவதற்காக தற்போது தன்னுடைய வீட்டின் அருகில் 150 கோடி பட்ஜெட்டில் ஒரு வீட்டை கட்டி வருகிறாராம். என்னதான் இருந்தாலும் அப்பாவின் வீடு தனக்கு இல்லையே என்ற ஆதங்கம் ஐஸ்வர்யாவுக்கு அதிக அளவில் உள்ளதாம்.

அதேபோல் தனுஷுக்கும் அந்த வீட்டின் மீது ஒரு கண் இருந்ததாக கூறுகின்றனர். ஆனால் அது தற்போது கிடைக்கவில்லை என்ற மன வருத்தம் இருவருக்குமே இருக்கிறதாம். இந்த தகவல்கள் ரஜினியின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ளன. ஆனால் இது உண்மையா? இல்லையா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

rajini-family-cinemapettai
rajini-family-cinemapettai
- Advertisement -