பாட்ஷா பார்ட் 2 எடுத்தா இவர்தான் மாணிக் பாட்ஷாவாக நடிக்னும்.. ரஜினியே கைகாட்டிய மாஸ் ஹீரோ!

ரஜினியின் படங்களில் மாஸ் லிஸ்ட் எடுத்துக்கொண்டால் அதில் முதலிடத்தில் கண்டிப்பாக இடம் பெறுவது பாட்ஷா படம் தான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்த படம் ரஜினிக்கு ஒரு மைல்கள் ஆக அமைந்தது. பொதுவாக ரஜினிகாந்த் நடித்த படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிப்பதை விரும்ப மாட்டார்.

அதனால் தான் சமீபத்தில் சந்திரமுகி 2 படத்தை பி வாசு இயக்கும்போது கூட ரஜினியின் அனுமதியோடு லாரன்ஸ் அந்த படத்தில் நடித்திருந்தார். சந்திரமுகி படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் இரண்டாம் பாகம் ரசிகர்களை கவர தவறிவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் சந்திரமுகிக்கு இருந்த பெயரையும் இரண்டாம் பாகம் வந்து கெடுத்துவிட்டது என ரசிகர்கள் வேதனையுடன் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். ரஜினியின் பாட்ஷா பார்ட் 2 படத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பாட்ஷா படத்தின் தெலுங்கில் ரீமேக் செய்யும்போது கூட சிரஞ்சீவி நடிப்பதாக இருந்ததாம். ஆனால் அப்போது அவரது கால்ஷீட் கிடைக்கவில்லையாம்.

இதனால் மோகன் பாபுவை வைத்து படம் எடுக்கலாமா என்று ரஜினியே கூறிய போது இது ஒரு சூப்பர் ஸ்டார் இமேஜ் உண்டான படம் என்பதால் வேண்டாம் சுரேஷ் கிருஷ்ணா கூறிவிட்டாராம். அவ்வாறு ஆரம்பத்தில் மிகவும் பொறுமையாக இருக்கும் கேரக்டர் ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் மாஸ் ஹீரோவாக இருப்பார். அதே போன்ற ஹீரோவால் மட்டும் தான் பாட்ஷா படம் பண்ண முடியும்.

அப்படி என்றால் அஜித் பாட்ஷா படத்திற்கு சரியாக இருப்பார் என்று சுரேஷ் கிருஷ்ணா கூறியிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் அஜித் தான் இதற்கு கனகச்சிதமாக பொருந்துவார் என்று சுரேஷ் கிருஷ்ணாவிடம் ரஜினியே ஒரு முறை கூறியதாக சொல்லி உள்ளார். ஏனென்றால் பாட்ஷா மாதிரி தான் அஜித்தின் பில்லா படமும் அமைந்திருந்தது.

மாஸ் ஹீரோவாக அஜித்தை மாற்றியது பில்லா படம் தான். ஆகையால் பாட்ஷா படத்திற்கு அஜித் மட்டும் தான் பொருந்துவார் என்று கூறியிருக்கிறார். மேலும் வருங்காலத்தில் பாட்ஷா பார்ட் 2 உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படியே உருவானாலும் அதில் அஜித் நடிப்பாரா என்பது சந்தேகம்தான்.