மண்டையில முடி இல்லாததற்கு இதுதான் காரணம்.. வெளிப்படையாக சொன்ன ரஜினி

தமிழ் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் உலக அளவில் அதிக பிரபலமாக இருப்பவர். அந்த வகையில் இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று கலெக்ஷனிலும் அதிக லாபம் பார்த்து வருகிறது.

தற்போது இவர் அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இந்த திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

மேலும் இந்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதை பற்றிய ஆவலும் ரசிகர்களிடம் இருக்கிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் தன் தலையில் முடி இல்லாமல் போனதற்கான காரணம் என்ன என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதாவது ரஜினிக்கு அழகே அவருடைய ஸ்டைலும், அந்த தலைமுடியும்தான். ஸ்டைலாக அந்த தலைமுடியை கோதியபடி அவர் நடந்து வரும் அழகே தனி தான். அந்த ஸ்டைலுக்கு மயங்காத ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டாருக்கு முடி கொட்டும் பிரச்சினை இருந்தது.

அந்தப் பிரச்சினை சிறிது சிறிதாக வளர்ந்து தற்போது அவர் வழுக்கை தலையுடன் இருக்கிறார். இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களில் எல்லாம் அவருக்கு பிரத்தியேகமாக விக் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பொது இடங்களிலும் அவர் வழுக்கை தலையுடன் தான் வருகிறார்.

இதற்கு காரணம் ரஜினிக்கு 20 வயதிலேயே தலைமுடி நரைக்க ஆரம்பித்திருக்கிறது. அதனால் அவர் முடியை கருப்பாக்குவதற்காக டை அடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன் பிறகு நரைமுடியும் அதிகமானதால், டை அடிப்பதையும் அவர் தொடர்ந்து செய்திருக்கிறார்.

இதுதான் அவருடைய முடி கொட்டும் பிரச்சனைக்கு ஆரம்பமாக இருந்திருக்கிறது. நாளடைவில் அவருடைய முடி அனைத்தும் கொட்டி வழுக்கையாக மாறிவிட்டது. இதுதான் தன்னுடைய தலையில் முடி இல்லாததற்கு காரணம் என்று தற்போது சூப்பர் ஸ்டார் தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்