சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

போலீஸ் கெட்டப்புக்கு பொருத்தமானவர் இவர்தான்.. புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவில் 168 படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய 71-வது வயதில் கதாநாயகனாக இளம் நடிகர்களுக்கு கடும் போட்டியாக தற்போதுவரை தெரிகிறார். இதற்கு முக்கிய காரணம் அவருடைய தனித்துவமான ஸ்டைல், நடை, டயலாக் டெலிவரி உள்ளிட்டவை தான். இதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருக்கும் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் தாறுமாறாக ஓடி பட்டையைக் கிளப்பும்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனால் இவருடைய அடுத்த படம் ‘தலைவர் 169’ படத்தில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். இந்த படம் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐபிஎஸ் போலீஸ் கெட்டப்பை எத்தனையோ நடிகர்கள் போட்டிருக்கிறார்கள். ஆனால் காக்க காக்க படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்த சூர்யாதான் ஐபிஎஸ் ஆக உடல், பாவனை அனைத்தையும் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். இதில் சூர்யாவை பார்த்த பிறகு, அந்த ஐபிஎஸ் பதவியில் இருக்கும் நபர்கள் கூட தாங்களும் இப்படித்தான் இருக்கவேண்டும் என கற்றுக்கொள்வார்கள்.

அந்த அளவிற்கு சூர்யா போலிஸ் கெட்டப்பை சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார் என ரஜினி சூர்யாவை புகழ்ந்து தள்ளி இருக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இதை சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களும் ட்ரெண்ட் ஆக்குகின்றனர். மேலும் சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான காக்க காக்க திரைப்படத்தை பெங்களூரில் யாருக்கும் தெரியாமல் ரஜினி, மாறுவேடத்தில் சென்று பார்த்தாராம்.

அப்போது அந்த படத்தை பார்த்த பிறகு சூர்யா சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் நடித்த படங்களில் அவருக்கு சுத்தமாகவே டான்ஸ், ஸ்டண்ட் எதுவும் தெரியவில்லை என நினைத்த ரஜினிக்கு இந்த படத்தை பார்த்த பிறகு செம தூள் கிளப்பியிருக்கிறார் என ரஜினி வியந்து பார்த்தாராம். பொதுவாக போலீஸ் கெட்டப் என்றால் நல்ல ஹைட் இருக்கிற கதாநாயகர்களுக்கு தான் பொருந்தும் என்ற எண்ணத்தை உடைத்து அந்த கதாபாத்திரம் தனக்கும் பொருந்தும் என சூர்யா, காக்க காக்க திரைப்படத்தின் மூலம் நிரூபித்துக் காட்டினார்.

அதன்பிறகு சிங்கம் மூன்று பாகங்களிலும் சூர்யா போலீஸ் கெட்டப்பில் பிரமாதமாக நடித்து சூப்பர் ஹிட் அடித்தது. எனவே இந்த விஷயத்தை வைத்து சூர்யா ரசிகர்கள் கெத்து காட்டுவது மட்டுமின்றி அவருடைய நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் வாடிவாசல் மற்றும் பாலா இயக்கத்தில் சூர்யா 41 படத்தை குறித்தும் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

- Advertisement -

Trending News