ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

உள்ளுக்குள் வன்மம்.. வாய்ப்பை அள்ளி கொடுத்த விஜய்.. பாராட்டிய அஜித்

நடிகர் விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். அதில் இடம்பெற்ற காட்சியை தொடர்ந்து, அடுத்த தளபதியாக சிவா கார்த்திகேயன் முயற்சிக்கிறார் என்ற பேச்சுக்கள் அடிபட ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் காமெடி படங்களில் நடித்துக்கொண்டிருந்த சிவகார்த்திகேயன், தற்போது மிலிட்டரி கெட்டப்பில் அமரன் படத்தில் பயங்கரமாக நடித்துள்ளார். இந்த படம் அவருக்கு பெரும் அந்தஸ்தை பெற்று கொடுக்கும் என்றும் பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கோட் திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சிவகார்த்திகேயனுக்கு வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கினார். இதே போல தளபதி விஜய் தனக்கு பிடித்தவர்களுக்கெல்லாம் வாங்கி கொடுப்பார். இதை தொடர்ந்து தற்போது தளபதி ரசிகர்கள் சிவகார்த்திகேயன் மீது அன்பை கொஞ்சம் அதிகமாகவே காட்டுகின்றனர்.

வன்மத்தில் சூப்பர்ஸ்டார் செய்த வேலை..

முன்னதாக, ஜெயிலர் திரைப்படத்தில், இயக்குநர் நெல்சன் ரஜினியின் மகனாக முதலில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க விருப்பப்பட்டதாகவும், ஆனால் ரஜினி அப்படி நடிக்க வைத்தால், சிவகார்த்திகேயன்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ஆகி விடும் என்பதால் அதனை மறுத்ததாகவும் கூறப்பட்டது. இவர் வன்மத்தில் தான் இப்படி செய்தார் என்ற பேச்சுக்களும் அடிப்பட்டது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் ஆடியோ லான்ச்சில் பேசிய சிவகார்த்திகேயன், அஜித் பற்றி நெகிழ்ச்சியுடன் சில விஷயங்களை கூறியுள்ளார். அதில், ” ‘welcome to the big league’ . உங்களை வளர்ச்சியைப் பார்த்து நிறைய பேர் பாதுகாப்பற்றது போல உணர்கிறார்கள் என்றால், நீங்கள் பெரிய பயணத்திற்குள் வந்து விட்டீர்கள் என்று அர்த்தம். வெல்கம்” என்றார்

அது எனக்கு உத்வேகத்தையும், தொடர்ந்து சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை கொடுத்தது. என் வாழ்க்கையில் அது ஒரு முக்கிய நாள் என்றும் கூறினார். இந்த நிலையில், அனைவரது அன்பையும் பெரும் சிவகார்த்திகேயனுக்கு, ஏன் சூப்பர்ஸ்டார் மட்டும் இப்படி ஓரவஞ்சனை காட்டினார் என்ற கேள்வியும் வந்துள்ளது..

- Advertisement -

Trending News