வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கமலுக்கு நோ சொன்ன ரஜினிகாந்த்.. அதுவும் இந்த டாப் இயக்குனரை நழுவவிட்ட சோகம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப் என முன்னணி நடிகர்களுடன் இந்த படம் பான் இந்தியா மூவியாக தயாராகி கொண்டிருக்கிறது. படத்தின் வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ரஜினிகாந்த் தற்போது இந்த படத்தின் வெற்றிக்காக பயங்கரமாக உழைத்து வருகிறார். மேலும் திரை கதையிலும் அதிக தலையீடு காட்டி அவ்வப்போது மாற்றி வருவதாக கூட தகவல்கள் வெளியாகின்றன. ரஜினி இந்த படத்திற்காக இப்படி பாடுபடுவதற்கு ஒரே காரணம் அவருக்கு சமீபத்தில் ரிலீசான படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்தது தான். எப்படியாவது ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி.

Also Read:கமலஹாசனை ஓடவிட்ட ரஜினி.. மேடையில் ரகசியத்தை போட்டு உடைத்த உலக நாயகன்

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த விக்ரம் திரைப்படம் தான் ரஜினியின் இந்த போராட்டத்திற்கு காரணம். அதே போன்று ஒரு வெற்றியை எப்படியாவது கொடுத்து விட வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார் சூப்பர் ஸ்டார். மேலும் இப்போது சூப்பர் ஸ்டாரின் மிகப்பெரிய கனவு என்பது எப்படியாவது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து விட வேண்டும் என்பதுதான்.

இப்போது லோகேஷ் உடன் பணி புரிவதற்காக ரஜினிகாந்த் பயங்கர முனைப்புடன் இருக்கிறார். ஆனால் ஒரு காலகட்டத்தில் தேடி வந்த லோகேஷ் கனகராஜின் பட வாய்ப்பை மறுத்திருக்கிறார் ரஜினிகாந்த். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து பணிபுரிவதாக தான் இருந்திருக்கிறது. மேலும் இந்த படத்தை உலகநாயகன் கமலஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்திருக்கிறது.

Also Read:சூப்பர் ஸ்டாரால தான் அந்த படம் பிளாப் ஆச்சி.. ஷாக்கான பதிலடி கொடுத்த இயக்குனர்

கமலஹாசன் முதலில் ரஜினியிடம் இந்த படத்தைப் பற்றி பேசியபோது ரஜினியும் அதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால் கமலுடன் இணைந்து விஜய் தொலைக்காட்சியை சேர்ந்த மகேந்திரனும் இந்த படத்தை தயாரிக்கிறார் என்று கமலஹாசன் சொல்லியதும் ரஜினிகாந்த் நீங்கள் மட்டும் தயாரிப்பதாக இருந்தால் நான் நடிக்கிறேன் இல்லையென்றால் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். அப்போது அந்த படத்தை முழுதாக தயாரிக்கும் நிலையில் கமலஹாசன் இல்லையாம் .

அதனால் இந்த படம் அப்படியே நின்றுவிட்டது. அதன் பின்னர் லோகேஷ் கனகராஜுக்கு கமல் கொடுத்த வாய்ப்பு தான் விக்ரம். ஒருவேளை ரஜினிகாந்த் அப்போது சம்மதித்திருந்தால் விக்ரம் படத்தைப் போல ஒரு பெரிய ஹிட் படத்தை ரஜினியுடன் இணைந்து கொடுத்திருப்பார் லோகேஷ் கனகராஜ். வந்த வாய்ப்பை நழுவ விட்டுவிட்டு இப்போது அவருடன் படம் பண்ணுவதற்காக தவம் கிடக்கிறார் சூப்பர் ஸ்டார்.

Also Read:சூப்பர் ஸ்டாரால தான் அந்த படம் பிளாப் ஆச்சி.. ஷாக்கான பதிலடி கொடுத்த இயக்குனர்

- Advertisement -

Trending News