தேடிப் போய் வாய்ப்பு கேட்ட மீனா.. செட்டாகாது என ரிஜெக்ட் செய்த ரஜினி

குழந்தை நட்சத்திரமாக சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்த மீனா பின்னாளில் அவருக்கே ஹீரோயினாக நடித்தார். அப்படி அவர்கள் இணைந்து நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட்டடித்தது. அது மட்டுமல்லாமல் ரஜினிக்கும் மீனாவின் மீது தனி பாசம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தனக்கு பிடித்த ஹீரோயின்களில் அவரும் ஒருவர் என்று சூப்பர் ஸ்டார் பலமுறை தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் ரஜினிக்கு பிடித்த நடிகையான மீனா தேடி போய் வாய்ப்பு கேட்டும் அவர் கொடுக்க மறுத்த தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது மீனாவுக்கு நல்ல கதை ஞானம் இருக்கிறது. ஒரு பட கதையை சொன்னால் அது பற்றி தன்னுடைய கருத்துக்களை பலரும் வியக்கும் அளவுக்கு அவர் கூறுவாராம்.

Also read: கல்யாணத்துக்கு முன் ஐஸ்வர்யா காதலித்த 2 பேர்.. கொளுத்தி போட்ட பயில்வான்

இதை நன்றாக தெரிந்து வைத்திருந்த ரஜினி படையப்பா படத்தின் கதையை அவரிடம் கூறியிருக்கிறார். அதை கேட்ட மீனா நீலாம்பரி கேரக்டரில் நான் நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதனால் ஷாக்கான சூப்பர் ஸ்டார் உங்களுக்கு குழந்தை முகம், இது போன்ற வில்லி கேரக்டர்கள் செட்டாகாது என்று மறுத்து இருக்கிறார்.

மேலும் சௌந்தர்யா கேரக்டரில் வேண்டுமானால் நீங்கள் நடிக்கலாம் என்று கூறியிருக்கிறார். ஆனாலும் மீனா அந்த கேரக்டரில் நான் தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் அவரை சமாதானப்படுத்த முடியாத ரஜினி இயக்குனர் மற்றும் மீனாவின் அம்மாவிடம் கூறி இருக்கிறார்.

Also read: கொஞ்சம் தலைவருக்கு ரெஸ்ட் குடுங்க ஐயா.. ஜெயிலர் முடிந்தவுடன் தலைவர் கையில் எடுத்த புது அவதாரம்

அதன் பிறகு தான் ரம்யா கிருஷ்ணன் அந்த கேரக்டருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனாலும் மீனாவுக்கு அந்த கதாபாத்திரம் தன் கையை விட்டு போய்விட்டதே என்ற வருத்தம் இருந்திருக்கிறது. இந்த விஷயத்தை சமீபத்தில் மீனாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் ரஜினி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

மேலும் அந்த கேரக்டர் கொடுக்காததால் மீனாவுக்கு இப்போது வரை என்மேல் கோபம் இருக்கும் என்றும் வேடிக்கையாக கூறினார். உண்மையில் அந்த நீலாம்பரி கேரக்டர் தான் இப்போது வரை ரம்யா கிருஷ்ணனுக்கு அடையாளமாக இருக்கிறது. அப்படி ஒரு கேரக்டரில் நடிக்க ஆசைப்பட்டு முடியாமல் போனதை மீனாவும் பல பேட்டிகளில் வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார்.

Also read: ரஜினி, கமலுக்கு அடையாளமாய் இருக்கும் படம்.. பாதியிலேயே கைவிடப்பட இருந்த காரணம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்