அரசியலுக்கு முழுக்கு, ரசிகர் மன்றங்கள் கலைப்பு.. மீண்டும் பரபரப்பை கிளப்பிய ரஜினிகாந்த்

கடந்த சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக கூறி பின்னர் தேர்தலில் இருந்து பின்வாங்கியது அனைவருக்குமே தெரிந்ததுதான். அதற்கு அவரது உடல்நிலை முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கும் ரஜினிகாந்த் திடீரென தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க போவதாக காலையில் பேட்டி கொடுத்து சென்றது மீண்டும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் அரசியல் ஆசையை ஏற்படுத்தியது.

அந்த பேட்டியில் தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருங்காலத்தில் அரசியல் பிரவேசம் இருக்குமா? இல்லையா? என்பதையெல்லாம் பற்றிப் பேசப்போவதாக தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த். ஆனால் போகும்போதே ஒரு முடிவுடன் தான் சென்றிருந்தார் என்பதுதான் உண்மையான விஷயம்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு எப்போதுமே வரப்போவதில்லை என்பதை தெள்ளத்தெளிவாக ரசிகர்களுக்கு உணர்த்திவிட்டார். மேலும் தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்து மக்கள் நலனுக்காக பயன்படும்படி மாற்ற உள்ளாராம்.

இது குறித்து பேசத்தான் தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை வரச் சொல்லியுள்ளார் ரஜினிகாந்த். காலையில் திடீரென ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து அரசியல் வருகை இருக்கிறதா? இல்லையா? என்று சொன்னதும் பலருக்கும் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்கிறாரே என்ற சந்தேகமும் சங்கடமும் நிலவியது.

ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அரசியலுக்கும் தனக்கும் ஒத்துவராது என்பதை தெள்ளத்தெளிவாக அறிக்கை மூலம் அறிவித்து விட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டார் ரஜினிகாந்த். விரைவில் ரஜினியின் அடுத்த படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

rajini-press-release
rajini-press-release
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்