தம்பி, ஒரு படத்தை வருஷக்கணக்கில் இழுக்கக் கூடாது.. இளம் இயக்குநருக்கு கட்டளை போட்ட ரஜினி

ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக இளம் இயக்குனர் ஒருவருடன் இணைந்து அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டார். இதுதான் இன்றைய கோலிவுட் ட்ரெண்டிங்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை முடித்து கொடுத்தும் சில காட்சிகள் நினைத்தபடி படக்குழுவினருக்கு திருப்தி தராததால் மேலும் ஒரு வாரம் படப்பிடிப்பை நடத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் உத்தரவிட்டதை தொடர்ந்து படக்குழு விரைவில் மேற்கு வங்காளம் செல்லவுள்ளது.

ஒரு வாரம் படப்பிடிப்பை முடித்த பிறகு ரஜினிகாந்த் அடுத்ததாக இடைவெளி இல்லாமல் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளாராம்.

முதலில் இந்த படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் தற்போது ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்க ஏஜிஎஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த படத்திலும் ரஜினிக்கு சம்பளம் நூறு கோடி தான்.

இதனைத் தொடர்ந்து இளம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியிடம் பேசிய ரஜினிகாந்த், அண்ணாத்த திரைப்படம் போல் பல வருடங்கள் இழுத்து விட கூடாது எனவும், வெறும் ஆறே மாதத்தில் இந்த படத்தை முடித்துவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளாராம்.

அதேபோல் இனிமேல் முடிந்த வரை வருடத்திற்கு இரண்டு படங்கள் நடித்து ரிலீஸ் செய்வதிலும் ஆர்வம் காட்டுகிறாராம் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்ததிலிருந்து முன்னரைவிட மேலும் சுறுசுறுப்பாக காணப்படுகிறார் என்கிறார்கள் அவரது வட்டாரங்கள்.

rajini-desingu-periyasamy-cinemapettai
rajini-desingu-periyasamy-cinemapettai

Next Story

- Advertisement -