ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

நெல்சனுக்கு கட்டளை போட்ட ரஜினி.. என் படத்துக்கு அப்படி ஒரு மேஜிக் வேணும்

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. அதேபோல் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் முதல் முறையாக நெல்சன், ரஜினி கூட்டணி உருவாகும் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ரஜினி எப்போதுமே தோல்வி இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கமாட்டார். ஆனால் பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே நெல்சன், ரஜினி, அனிருத் கூட்டணியில் படம் உருவாவது உறுதி ஆகிவிட்டது. ஆனால் பீஸ்ட் படத்தின் விமர்சனத்தினால் நெல்சனுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்த நிலையில் ரஜினி தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.

ஆனாலும் நெல்சன் மீது முழு நம்பிக்கை இல்லாமல் ரஜினி இப்படத்தில் கேஎஸ் ரவிக்குமாரை நியமித்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது நெல்சனை வீட்டுக்கு வரவழைத்த ரஜினி சில விஷயங்களைக் கூறியுள்ளார். அதாவது தற்போது தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் மாறியுள்ளது.

இதனால் பெரிய ஹீரோக்கள் எல்லாம் தற்போது இளம் இயக்குனர்களையே தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்தவகையில் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், வினோத் போன்ற இளம் இயக்குனர்களுக்கு ஹீரோக்கள் வாய்ப்பளித்த வருகின்றனர். இதில் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் நெல்சன் இடம் ரஜினி என்னுடைய படையப்பா, பாட்ஷா, அருணாச்சலம் போன்ற படங்கள் அதிரிபுதிரி ஹிட் அடித்தது. அது தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு மேஜிக்கை ஏற்படுத்தியது. என்னுடைய பழைய படங்கள் எப்படி ஒரு மேஜிக் செய்வதோ அதேபோல் புதிய ட்ரெண்டுக்கு ஏற்றாற்போல் ஜெயிலர் படத்தை எடுக்க கட்டளை போட்டுள்ளாராம் ரஜினி.

இதனால் செய்வதறியாமல் இருக்கும் நெல்சன் கதையில் பல மாற்றங்கள் செய்து வருகிறாராம். இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ரஜினி சொன்னதுபோல் ஜெயிலர் படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு மேஜிக்கை ஏற்படுத்துகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -

Trending News