ராஜமௌலி படத்தை கைப்பற்றிய ரஜினி பட நிறுவனம்.. நஷ்டத்தை சரிக்கட்ட செம சான்ஸ்!

ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக இருக்கும் ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை ரஜினி படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளதாம்.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் உருவான கத்தி படத்தின் மூலம் தயாரிப்பு நிறுவனமாக களமிறங்கியது லைக்கா நிறுவனம். முதலில் இலங்கை நிறுவனம் என கத்தி படத்திற்கு பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது.

அதை எதிர்ப்பு எல்லாம் மீறி கத்தி படம் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. விஜய் படத்திற்கு மட்டுமே இந்த எதிர்ப்பு வந்தது குறிப்பிடத்தக்கது. கத்தி படத்திற்கு பிறகு லைகா நிறுவனம் தயாரித்த படங்களுக்கு எந்த ஒரு எதிர்ப்பும் வரவில்லை.

லைகா நிறுவனத்தின் ஒரே குறிக்கோள், முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரித்து முன்னணி தயாரிப்பு நிறுவனமாக மாற வேண்டும் என்பதுதான். ஆனால் அங்கு தான் தவறு நடந்தது. சரிவர நல்ல கதைகளை தேர்வு செய்யாமல் பல தோல்வி படங்களை கொடுத்தது.

அதுமட்டுமில்லாமல் சங்கர் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவான 2.O படத்திற்கு ஏகப்பட்ட பணத்தை செலவழித்து நஷ்டமானது. அதனைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தால் நஷ்டமானதாக தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும் லைகா நிறுவனத்தை நோக்கிப் படையெடுத்தனர்.

இந்நிலையில் விட்டதை பிடிக்க தற்போது விநியோகஸ்தராக களமிறங்கியுள்ளது லைக்கா நிறுவனம். அந்த வகையில் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் RRR படத்தின் வெளியீட்டு உரிமையை பல கோடி கொடுத்து வாங்கியுள்ளது. ஏற்கனவே RRR படத்தின் டீசர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாக உள்ளதாம். மேலும் RRR படம் அக்டோபர் மாதம் 13ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

lyca-got-RRR-rights
lyca-got-RRR-rights
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்