ரஜினி கமல் விஜயகாந்த் விட்டுக்கொடுக்காத 3 நடிகர்கள்.. கேப்டனின் 70% படங்களில் நடித்த வில்லன் நடிகர்

Rajini Kamal Vijayakanth Who Never Give Up 3 Actors in tamil cinema: சினிமாவில் நடிகர்கள் எங்களுக்கு ரியலும், ரீலும் வேறு வேறு என்று சொல்லிக் கொண்டாலும் தங்கள் மனதிற்கு பிடித்த ஆத்மார்த்தமான நபர்களுடனே திரையிலும் பயணிக்க விரும்புகின்றனர். 

தங்களது படங்களிலும் ஒரு சில நபர்களை விட்டுக் கொடுக்காது அவர்களுக்கென ஒரு கேரக்டரை அமைத்து, தானும் முன்னேறி அவர்களையும் முன்னேற்றி விடுகின்றனர்.   

அந்த வகையில் ரஜினி கமல் விஜயகாந்த் விட்டுக் கொடுக்காத 3 நடிகர்களை காணலாம்.

ரஜினி-ஜனகராஜ்: ஜனகராஜின் ஜனரஞ்சிதமான காமெடியில் மனதை பறிகொடுத்த ரஜினி அவருடன் அண்ணாமலை, பணக்காரன், அருணாச்சலம், பாட்ஷா உள்ளிட்ட பல படங்களிலும் இணைந்து நடித்துள்ளார்.  

படத்தின் கதை கேட்கும்போது அவருக்கு ஒரு கதாபாத்திரம் செட் செய்து இயக்குனரிடம் முதல் ஆளாக கமிட் செய்ய சொல்வாராம்.

கமலுடன் கூட்டணி வைத்த சந்தான பாரதி

கமல்- சந்தான பாரதி:  கமல் தனது படங்களில் பெரும்பாலும் விட்டுக் கொடுக்காத நடிகர் என்றால் அது சந்தான பாரதி தான். திறமையான இயக்குனரான சந்தான பாரதியை ஒரு சில படங்களில் கதை விவாதத்தில் இருந்தே கூட வைத்துக் கொண்டாராம்.

சந்தான பாரதியின் இயக்கத்தில் குணா, மகாநதி போன்ற படங்களில் நடித்துள்ள கமல். இவர் நடிக்கும் படங்களிலும் சந்தான பாரதிக்கு ஒரு கேரக்டர் ஒதுக்கி விடுவாராம்.

மைக்கேல் மதன காமராஜன், பஞ்சதந்திரம், அன்பே சிவம் போன்ற பல படங்களிலும் கமலுடன் இணைந்து  நடித்திருந்தார் சந்தான பாரதி.

விஜயகாந்த்- எம் என் நம்பியார்: ரஜினி கமல் என இரு ஆளுமைகளுக்கு மத்தியில் தனது அதிரடி ஆக்சன் படங்களால் முத்திரை பதித்த விஜயகாந்தின் பேவரைட் நடிகர் எம் என் நம்பியார் ஆவார்.

எம்ஜிஆர், சிவாஜி காலத்திலேயே வில்லத்தனத்தில் மிரட்டியவர், காலப்போக்கில் குணச்சித்திர நடிகராக இளம் தலைமுறையினருடன் கைகோர்த்தார் நம்பியார். 

விஜயகாந்தின் நலம்  விரும்பியான நம்பியார் அவருடன் காவியத் தலைவன், பாட்டுக்கு ஒரு தலைவன் போன்ற 70% க்கும் மேலான படங்களில் இணைந்து நடித்துள்ளார் நம்பியார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்