சக்கையாக பிழிந்து எடுக்கும் ரஜினி பட இயக்குனர்.. தெறித்து ஓடும் லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா

தன்னுடைய 71 வயதிலும் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீப காலமாக இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் 165-வது படமான பேட்ட படத்தில் ரஜினியை சக்கையாக பிழிந்த கார்த்தி சுப்புராஜ் கையில் தற்போது ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா மாட்டிக்கொண்டு முழிக்கின்றனர்.

ஏனென்றால் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்ட நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை 8 வருடங்கள் கழித்து மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் அதன் 2-ம் பாகத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிலும் ட்ரெண்டானது. ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகத்தில் சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹா இருவரும் இணைந்து நடித்து ஹிட் கொடுத்தனர்.

Also Read: ஒரு தலைமுறையையே நாசமாக்கிய ரஜினி.. எல்லாத்துக்கும் பிள்ளையார் சுழி போட்ட பாலச்சந்தர்

ஆனால் இரண்டாம் பாகத்தில் மிரட்டல் கெட்டப்பில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார்கள். இந்நிலையில் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கொஞ்சம் கூட இந்த படத்திற்கு ரெஸ்ட் இல்லாமல் டே நைட் சூட்டிங்கை வைக்கிறாராம். ஏற்கனவே ரஜினி பேட்ட படத்திற்கு இப்படித்தான் செய்தாராம். சுமார் ஏழு மணி எட்டு மணிக்கு மேல் சூப்பர் ஸ்டாரை, சார் ஒரு அரை மணி நேரம் ரெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுவாராம்.

இப்பொழுதும் 24/7 என்று ஜிகர்தண்டா 2 ஷூட்டிங் எடுத்துக்கொண்டிருக்கிறார். ரஜினியை பேட்ட படத்தில் விட்டு வைக்காத கார்த்திக் சுப்புராஜ் இப்போது ஜிகர்தண்டா 2 படத்திலும் எஸ்ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரையும் சக்கையாக பிழிந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: வெறித்தனமாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டீசர்.. சிங்கம், புலி போல் மோதிக் கொள்ளும் எஸ்ஜே சூர்யா-லாரன்ஸ்

ஏனென்றால் பேட்ட படத்திற்கு நெகட்டிவ் கமெண்ட்கள் குவிந்ததால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் ஜிகர்தண்டா 2 படத்தை எந்த குறைபாடும் இல்லாமல் நிறைவுடன் எடுத்து முடிக்கும் எண்ணத்தில் கார்த்திக் சுப்புராஜ் இருக்கிறார். ஏற்கனவே ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடித்த நிலையில், 2ம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

சேதுவாக முதல் பாகத்தில் பின்னிப் பெடல் எடுத்த பாபி சிம்ஹா, ஜிகர்தண்டா 2 திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்து இருக்கிறார். இது சிலருக்கு ஏமாற்றத்தை தந்தாலும் ராகவா லாரன்ஸின் வித்தியாசமான கெட்டப்பும், அவருக்கு இணையாக மிரட்டும் எஸ்ஜே சூர்யா இருவரின் காம்போ உங்களுக்கு மனநிறைவை அளிக்கிறது ஆகையால் இந்த வருடம் பரபரப்புடன் தயாராகிக் கொண்டிருக்கும் ஜிகர்தண்டா 2 படத்தின் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Also Read: ஜிகர்தண்டா 2 படத்தில் பாபி சிம்ஹாவுடன் இணையும் பிரபலம்.. 150 கோடியை குறிவைத்த கார்த்திக் சுப்புராஜ்

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -