ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

என்னுடைய ஆணவத்திற்கு காரணம் ரஜினிதான்.. ஒரே போடாக போட்ட சுந்தர் சி

சுந்தர் சியின் படங்கள் பெரும்பாலும் நகைச்சுவை ஜானரில் எடுக்கப்பட்டிருக்கும். பேய் படமாக இருந்தாலும் கூட அதிலும் நகைச்சுவையை காட்டியிருப்பார் சுந்தர் சி. இந்நிலையில் பல நடிகர்களும் சுந்தர் சி-க்கு ஆணவம் இருப்பதாக கூறி வருகின்றனர். அந்த ஆணவத்திற்கு காரணம் ரஜினிதான் என்று சுந்தர் சி கூறியுள்ளார்.

அதாவது சுந்தர் சியும் குஷ்புவும் ஒருமுறை ஹோட்டலில் சாப்பிடும் போது ரஜினி தனது குடும்பத்துடன் அதே ஹோட்டலுக்கு வந்துள்ளார். அப்போது ரஜினியுடன் குஷ்பூ நிறைய படங்களில் நடித்திருந்ததால் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது சுந்தர் சி யை பார்த்த ரஜினி என்ன படம் இயக்குகிறார்கள் என்று கேட்டுள்ளார்.

அப்போது உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தை இயக்குவதாக சுந்தர்சி கூறியுள்ளார். அந்தச் சமயத்தில் உள்ளத்தை அள்ளித்தா என்ற வார்த்தை கூட ரஜினிக்கு சொல்ல வரவில்லையாம். இதுதான் சுந்தர் சி மற்றும் ரஜினியின் முதல் சந்திப்பாக அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த வருடமே ரஜினி சுந்தர் சியை அழைத்துள்ளார்.

இப்போது உங்களிடம் கதை இருக்கிறதா என்றெல்லாம் ரஜினி கேட்கவில்லையாம். அடுத்து ஒரு படம் நடிக்க போகிறேன், நீங்கள் இயக்குகிறீர்களா என்றுதான் கேட்டாராம். அதன் பிறகு தான் இவர்களது கூட்டணியில் அருணாச்சலம் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.

அதிலிருந்து சுந்தர் சி எந்த நடிகர் இடமும் கதை இருக்கிறது படம் பண்றீங்களா என்ன கேட்க மாட்டாராம். ரஜினி எப்படி உங்களிடம் கதை இருக்கிறதா, சான்ஸ் தருகிறேன் என்று கூறாமல் என் படத்தை நீங்கள் இயக்குகிறீர்களா என்று கேட்டார். அதேபோல் நானும் மற்ற நடிகர்களிடம் என் படத்தில் நீங்கள் நடிக்கிறாரா என்று தான் கேட்பேன்.

ஒரு கதை இருக்கிறது, அதில் நீங்கள் நடிக்கிறீர்களா என்று எப்போதுமே கேட்க மாட்டேன் என சுந்தர் சி கூறியுள்ளார். இதனால்தான் பல நடிகர்களும் சுந்தர்சி ஆணவத்துடன் உள்ளார் என கூறி வந்தனர். ஆனால் இதற்கெல்லாம் காரணம் ரஜினிதான் என்று ஒரே போடாக போட்டு உள்ளார் சுந்தர் சி.

- Advertisement -

Trending News