கமலை காட்டிலும் ரஜினி எவ்வளவோ மேல்.. மேடையில் கிழித்து தொங்க விட்ட பிரபலம்

கோலிவுட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் ஜாம்பவான்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இருவரும் ஒரே சமயத்தில் அரசியலுக்கு வருவதாக அறிவிப்பை வெளியிட்டனர். அதன்பின் ரஜினிக்கு உடல் நலக்குறைவு காரணமாக அவர் புதிதாக துவங்க இருந்த அரசியல் கட்சியை துவங்காமல் அரசியலை விட்டு விலகுவதாகவும் அறிவிப்பை வெளியிட்டார்.

இது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தாலும் முன்வைத்த காலை பின் வைத்த ரஜினி எவ்வளவோ மேல் என பிரபலம் ஒருவர் கமலை கடுமையாக தாக்கி பேசி இருக்கிறார். செய்தி சேனல்களில் அரசியல்வாதிகளையும் திரை பிரபலங்களையும் கேள்விகளால் திணறடிக்கும் செய்தியாளர் முக்தர் மேடையில் ரஜினியுடன் கமலை ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

Also Read: ரஜினி கொடுத்த டார்ச்சரால் கடுப்பான இயக்குனர்.. இனி உங்க சவகாசமே வேண்டாம் என்று ஓடிய சம்பவம்

பல இடங்களில் ரஜினி செய்த தவறுகளையும் சுட்டிக் காட்டி இருந்தாலும் துணிச்சலுடன் அரசியலை ஆரம்பிக்கிறேன் என சொல்லிவிட்டு, அந்த முயற்சியை கைவிட்டது பலராலும் விமர்சிக்கப்பட்டது. இருந்தாலும் அவர் சூப்பர் ஸ்டார் என்ற சொல்லுக்கு நிகராக துணிச்சலுடன் கட்சியை ஆரம்பிக்கிறேன் என்ற சொன்ன பின், அதைவிட பல மடங்கு துணிச்சலுடன் கட்சி ஆரம்பிக்கவில்லை என முடிச்சு விட்டுவிட்டார்.

ஏனென்றால் தன் ரசிகர்கள் தொண்டர்கள் பாதிப்பு அடையாம இருக்க தன்னை கேலி பண்ணாலும் பராவயில்லை என்று ரஜினி முடிவு எடுத்தார். ஆனால் இப்போது ஒரு சில நடிகர்கள் தன்னுடைய ரசிகர்களையும் இளைஞர்களையும் வசப்படுத்தி தன்னுடைய ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொண்டு அதை வாக்கு வங்கியாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அரசியல்வாதிகள் உருவெடுக்கின்றனர்.

Also Read: சூர்யா பட வெற்றி இயக்குனரை தட்டி தூக்கிய ரஜினி.. உறுதியான அடுத்த பட போலீஸ் காம்போ

ஆனால் ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு முடிவை எடுத்து விட்டோம் மற்றவர்களுக்காக அந்த முடிவில் தொடர்ந்து போக வேண்டும் என்று நினைக்காமல் துணிச்சலுடன் முடிவெடுத்து தன்னுடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய பாடகத்தை புகுத்தியுள்ளார். இதைப் புரிந்து கொண்டு அரசியலில் தன்னுடைய மானத்தை காப்பாற்றிக் கொள்ள தன் ரசிகர்களை அடகு வைக்கும் கமலஹாசனிடம் உஷாராக இருக்க வேண்டும்.

அதேபோல் ரசிகர் மன்றம் என பெரும் திரளான ரசிகர்களை வசப்படுத்தி இருக்கும் டாப் ஹீரோக்களிடமும் ஜாக்கிரதியாக இருக்க வேண்டும் என்றும் முக்தர், கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை மேடையில் கிழித்து தொங்க விட்டிருக்கிறார்.

Also Read: அடுத்த உலக நாயகன் யார் என வெளிப்படையாக சொன்ன கமல்.. நடிப்பு அரக்கனாச்சே

மேலும் கமலஹாசன் தற்போது இடைத்தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்பதற்காக மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், அவருடைய ரசிகர்களை வைத்து ஆதாயம் தேட வேண்டாம் என்றும் பிரபலங்கள் பலரும் மேடையில் விளாசி வருகின்றனர். அதிலும் முக்தரின் பேச்சு தற்போது மீடியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்