சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

வில்லாதி வில்லனாக வேட்டையாட போகும் ரஜினி.. லோகேஷ்க்கு கொடுத்த ஆறு மாசம் கெடு என்ன தெரியுமா.?

Rajini Lokesh Movie Updates: லோகேஷ் லியோ படத்திலிருந்து முழுவதுமாக வெளியே வந்து விட்டார். இந்த படத்தினால் நிறைய கெட்ட பெயர்கள் லோகேஷுக்கு வந்துவிட்டது. அதைப்பற்றி கவலைப்படாமல் தான் நினைப்பதை தன்னடக்கமாக அனைத்து பேட்டிகளிலும் வெளிப்படுத்தி வருகிறார். தற்போது பேட்டிகள் கொடுப்பதையும் குறைத்துக் கொண்டுள்ளார்.

அடுத்த முழு கவனத்தையும் ரஜினி படத்திற்கு கொண்டு சென்று விட்டார். தனக்கு தோல்வி வரும் என அடிக்கடி சொல்லி வந்த லோகேஷ் அதை லியோ படத்தில் பார்த்து விட்டார். அதனால் இதில் என்னெல்லாம் தவறு செய்தாரோ அதை சரி செய்ய தயாராகிவிட்டார். முக்கியமாக லோகேஷ் ரஜினியை பல படங்களில் வில்லனாக ரசித்திருக்கிறார். அதை மையப்படுத்தி தான் கதை நகர வேண்டும் என முடிவு செய்திருக்கிறார். ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி ரஜினியை வில்லத்தனமாக காட்டப் போவது உறுதியாகியுள்ளது.

முக்கியமாக இந்த படம் ஆங்கில படத்தின் தழுவலாக இருக்கக் கூடாது என்று முதல் கட்டளையை கூறியுள்ளார் ரஜினி. தனக்குன்னு தனியாக கதை தயார் செய்ய வேண்டும் இந்தப்படம் LCU-யில் வரக்கூடாது என்ற நிபந்தனையும் விதித்துள்ளார். மல்டி ஸ்டார் படமாக தான் இருக்க வேண்டும் அதுவும் நான் சொல்லும் நடிகர்களை படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஜெய்லர் படத்திலும் ரஜினி சொன்ன நடிகர்களை தான் நெல்சனும் நடிக்க வைத்தார் வெற்றி பெற்றார்.

லோகேஷ் என்ன செய்வதே என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்று கொண்டிருக்கிறார். பொதுவாகவே அவர் ரொம்ப பேச மாட்டார் இதுவும் ரஜினி என்றால் என்ன சொல்வது என்று தெரியாமல் சரி சரி என்று தலையாட்டி வருகிறார். லோகேஷ் பொறுத்தவரை அவராக ஒரு முடிவு செய்து படத்தை எடுத்தால் வெற்றி பெற்றுவிடும்.

இதே போல் லியோ படத்திலும் லோகேஷ் தனது கதையைத்தான் படமாக ஆசைப்பட்டார் விஜய் மற்றும் தயாரிப்பாளர்களின் தலையிடால் கதை வேற விதமாக மாறி கடைசியில் அவர் நினைத்த மாதிரி படம் வராமல் போனது. அதேபோல் ரஜினியும் ஏதாவது ஒன்று சொல்லிக் கொண்டே இருக்கிறாராம் என்ன செய்வது என்று தெரியாமல் அதற்கு தகுந்த மாதிரி கதையை தயார் செய்து வருகிறார். தமிழ் சினிமாவில் என் படம் தான் 1000 கோடி வசூல் பெற வேண்டும். ஜெய்லர் படத்தில் அதை விட்டு விட்டேன் இந்த படத்தில் கண்டிப்பாக 1000 கோடி எடுக்க வேண்டும் என்று உறுதியாக கூறியுள்ளார் ரஜினி.

ரஜினி சொன்ன ஒரே வார்த்தை எனக்கு இந்த படம் இந்தியாவை திரும்பிப் பார்க்கிற அளவிற்கு இருக்க வேண்டும். அதற்கு தகுந்த மாதிரி படத்தை தயார் செய்யுங்கள். உளவுத்துறை சம்பந்தமான கதை மற்றும் ஆக்சன் அதிகமாக இருந்தாலும் அதில் மக்களுக்கான கருத்துக்களோடு படம் இருக்க வேண்டும். இது எனக்கு கடைசி படமாக இருக்குமா, இல்லையா என்று தெரியவில்லை ஆனால் எனக்கு இந்த படம் மிக முக்கியமான படமாக அமைய வேண்டும் என்று லோகேஷ் இடம் வற்புறுத்தி கூறியிருக்கிறார் ரஜினி.

- Advertisement -

Trending News