எஸ்பிபி பாடாத ரஜினியின் 5 அறிமுகப் பாடல்கள்.. அதிலும், 4 பாடல்கள் மரண ஹிட்

ரஜினிகாந்த் திரைப்படங்களில் இவரின் அறிமுகப் பாடல்கள் எப்பவுமே ரசிகர்களால் கொண்டாடப்படும். எண்பதுகளின் காலகட்டத்திற்குப் பிறகு ரஜினிக்கு அறிமுகப்பாடல் என்பது கட்டாயமாக இருந்தது. அந்த வகையில் பல வருடங்களாக ரஜினிக்கு அறிமுக குரலாக இருந்தது லெஜன்ட் எஸ்பிபி அவர்களின் குரல் தான்.

எஸ்பிபி அவர்களின் குரலில் வெளிவந்த ரஜினியின் அறிமுகப் பாடல்கள் அனைத்துமே தாறுமாறாக ஹிட் அடித்துள்ளது. மறைந்த பாடகர் எஸ்பிபி அவர்களின் கடைசிப் பாடலாக ரஜினியின் அண்ணாத்த திரைப்படப்பாடல் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

ரஜினியின் சில அறிமுக பாடல்கள் வேறு பாடகர்களால் பாடப்பட்டு வெளிவந்துள்ளது. இதுவும் ரசிகர்களை ரசிக்கவே வைத்தது. அந்த வகையில் ரசிகர்கள் ரசித்த எஸ்பிபி பாடாத சில ரஜினியின் அறிமுகப் பாடல்கள் இதோ.

ராஜாதி ராஜா – மலையாள கரையோரம்: இளையராஜாவின் இசையில் பாடகர் மனோ பாடிய பாடல் ஒரு வித்யாசமான ரஜினியின் அறிமுகப்பாடல். நடிகர் எம்ஜிஆர் அவர்கள் நடித்த அன்பே வா திரைப்படத்தில் வரும் புதிய வானம் பாடலைப் போன்று இயற்கை காட்சிகளுடன் எடுக்கப்பட்ட இந்தப் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

எஜமான் – எஜமான் காலடி மண்ணெடுத்து: பாடகர் மலேசியா வாசுதேவன் குரலில், கிராமத்து பின்னணியில் காட்சி அமைக்கப்பட்டு வெளிவந்தது. சின்னக்கவுண்டர் படத்தின் அறிமுக பாடலை போல இப்பாடலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

உழைப்பாளி – உழைப்பாளி இல்லாத நாடுதான்: உழைப்பாளர்களை பெருமைப்படுத்தி கருத்துக்களை கூறும் வகையில் பாடப்பட்ட இப்பாடலை பாடகர் மனோ பாடியுள்ளார். மேலும் அண்ணாமலை, பாட்ஷா போன்ற திரைப்படங்களிலும் மனோ அவர்கள் பாடலை பாடியுள்ளார்.

பாபா – டிப்பு டிப்பு: ஏஆர் ரகுமான் இசையில் சங்கர் மகாதேவன் குரலில் வித்தியாசமாக உருவாக்கப்பட்ட பாடல். இசையால் இப்பாடல் வெற்றி பெற்றாலும் இப்படத்தில் உள்ள ஆன்மிகக் கருத்துக்களால் படத்தினை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் இப்பாடல் அடைய வேண்டிய உயரத்தை எட்ட வில்லை இருந்தாலும் ரசிகர்கள் இப்பாடலை ரசித்தனர்.

கபாலி – நெருப்புடா: சந்தோஷ் நாராயணன் இசையமைக்க நெருப்புடா பாடல் பாடகர் அருண் காமராஜ் அவர்களால் எழுதப்பட்டு பாடப்பட்டது. இப்பாடலின் வரிகள் மிகவும் உற்சாகமாக இருந்த காரணத்தினால் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

kabali-rajini
kabali-rajini
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்