புகழின் உச்சியில் இருந்த எம்ஜிஆர், சிவாஜி.. ரஜினியின் கால்ஷூட்டுக்காக தவம் கிடந்த சம்பவம்

சாதாரண நடிகராக பார்க்கப்பட்ட ரஜினி இன்று சூப்பர் ஸ்டாராக புகழின் உச்சியில் இருக்கிறார். இந்த ஒரு அந்தஸ்தை அடைவதற்கு அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் கிடையாது. அதிலும் சிவாஜி, எம்ஜிஆர் இருவரும் புகழின் உச்சியில் இருந்த காலகட்டத்திலேயே ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்து கிடைத்தது தான் அவருடைய கடின உழைப்புக்காக கிடைத்த பலன்.

அந்த வகையில் ரஜினி பைரவி என்ற திரைப்படத்தில் நடித்த போதுதான் கலைப்புலி தாணுவால் சூப்பர் ஸ்டார் என்று விளம்பரப்படுத்தப்பட்டார். இதை கேள்விப்பட்ட ரஜினி பெரிய ஹீரோக்களான எம்ஜிஆர், சிவாஜி எல்லாம் கோபப்படுவாங்க என்று தயக்கம் காட்டி இருக்கிறார். ஆனாலும் தாணு தன் முடிவில் பிடிவாதமாக இருந்திருக்கிறார். இப்படி தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினியை தேடி வந்தது.

Also read: ரஜினியின் கதையில் நடிக்கும் சிம்பு.. கமலுக்காக பல கோடி சம்பளத்தை குறைத்துக் கொண்ட சம்பவம்

அதிலும் சென்னையின் பல முக்கிய இடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற பிரம்மாண்ட கட் அவுட்டுகள் வைக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது. அதன் பிறகு படமும் ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்டது. இதனால் தயாரிப்பாளரான கலைஞானம் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்திருக்கிறார். அப்போது பிரபல தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் அவரை தேடி வந்து படம் குறித்து தன் மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் ரஜினியின் கால்ஷூட் என்னுடைய அடுத்த இரண்டு படங்களுக்கு வேண்டும் என்றும் கேட்டு இருக்கிறார். அங்கு தான் முக்கிய விஷயமே இருக்கிறது. ஏனென்றால் இந்த படத்தில் ரஜினி நடிக்கிறார் என்று கேள்விப்பட்டதுமே சின்னப்பா தேவர் கலைஞானத்திடம் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

Also read: பத்து தல படத்தில் நடிக்க இருந்த ரஜினி.. திடீர் என்ட்ரி கொடுத்த சிம்பு, காரணம் இதுதான்

ஆனாலும் இந்த படம் ரிலீசுக்கு தயாரான போது அவர் ஓடவே ஓடாது என்று தான் நினைத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் இதனால் நஷ்டம் அடைந்து விடுவார் என்றும் அவருடைய கடன்களை அடைத்து தன்னுடனே வைத்துக் கொள்ளலாம் எனவும் அவர் கணக்குப் போட்டு இருக்கிறார். ஆனால் அவரின் நினைப்பை உடைத்துக் காட்டி சூப்பர் ஸ்டாராக ரஜினி கொண்டாடப்பட்டார்.

அதிலும் தன்னை உதாசீனப்படுத்தியவரே தன் கால்ஷூட்டுக்காக தவம் கிடந்த வரலாற்றை உருவாக்கிய பெருமையும் சூப்பர் ஸ்டாரையே சேரும். அதன் பிறகு ரஜினியும் சின்னப்பா தேவர் தயாரிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்தார். இப்படித்தான் ஒரு சாதாரண நடிகராக இருந்தவர் இமயமலை உயரத்திற்கு தன் வெற்றி கொடியை நாட்டினார்.

Also read: 40 வயதில் ஹீரோவான 5 நடிகர்கள்.. எம்ஜிஆரை தூக்கி சாப்பிட்ட எலும்பு கடி மன்னன்

Next Story

- Advertisement -