லோகேஷின் அடிமடியிலேயே கை வைத்த தலைவர்171.. லியோ சொதப்பலால் ரஜினி போட்ட 4 கண்டிஷன்

Lokesh in Thalaivar 171: என்னதான் டாப் கியர் போட்டு வாழ்க்கை பிரகாசமாக ஜொலித்தாலும் அதில் ஒரு சறுக்கு ஏற்படத்தான் செய்யும். இதற்கு உதாரணமாக லோகேஷின் கேரியரை சொல்லலாம். அதாவது இயக்குனராக வந்ததிலிருந்து அவர் எடுத்த படங்கள் அனைத்தும் சஸ்பென்ஸ் நிறைந்த விறுவிறுப்பான கதைகளை கொடுத்து சினிமாவில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி விட்டார்.

அதனாலேயே முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவருக்கு கொக்கி போட்டு வந்தார்கள். முக்கியமாக கமலை வைத்து எடுத்த விக்ரம் படம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனாலேயே தனிப்பட்ட முறையில் ரஜினி இவரை கூப்பிட்டு எனக்காக ஒரு படம் எடுக்க வேண்டும் அதில் நான் நடிக்க விரும்புகிறேன் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார்.

அதன்படி லோகேஷும் ஒத்துக்கொண்டு தலைவர்171-வது படத்தில் இணைந்து விட்டார். இதற்கிடையில் லோகேஷ் இயக்கி விஜய் நடித்த லியோ படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலை தொட முடியாமல் ரெண்டுங்கெட்ட விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் லோகேஷ் மீது இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் ரஜினி அவருடைய 171 ஆவது படம் எந்த மாதிரியாக இருக்க வேண்டும் என்று லோகேஷ்க்கு சில கண்டிசன்களை போட்டிருக்கிறார். அதில் அவருக்கு வைக்கப்பட்ட முதல் செக் என்னவென்றால் இப்படம் LCU சம்பந்தமான கதையாக இருக்கக் கூடாது என்று சொல்லி லோகேஷின் அடிமாட்டிலேயே கை வைத்து விட்டார்.

அடுத்து முழுக்க முழுக்க என்னுடைய ஸ்டைலில் தான் கதை இருக்க வேண்டும் என கேட்டிருக்கிறார். இதனால் நெல்சன் பீஸ்ட் படத்தை முடித்துவிட்டு எந்த நிலைமையில் இருந்தாரோ, அதே நிலைமை தற்போது லோகேஷ்க்கு வந்து விட்டது. அதாவது தன்னுடைய மார்க்கெட் ரேட் கூடியதால் இவருடைய அடுத்த படத்திற்கான சம்பளத்தை டிமாண்ட் பண்ணி கேட்டு வந்தார்.

ஆனால் தற்போது லியோ சொதப்பலால் இவருடைய சம்பளத்தை எவ்வளவு என்று தயாரிப்பாளரே தீர்மானிக்க போகிறார். அந்த வகையில் இப்படத்தை தயாரிக்கும் கலாநிதி மாறன் தலைவர் 171 படத்திற்கு பட்ஜெட் அவரே நிர்ணயிக்கப் போகிறார். அதற்குள்ள தான் லோகேஷ் படத்தை எடுத்து முடிக்க வேண்டும். இப்படி தலைவர் 171 படத்திற்கு லோகேஷ்க்கு கண்டிஷன்கள் போடப்பட்டு வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்