4-வது படத்திலேயே மார்க்கெட்டை பிடித்த நடிகர்.. மைக்கேல் ஜாக்சன் என பாராட்டப்பட்ட ரஜினியின் நண்பர்

நின்னா நடந்தா வசனம் பேசும்போது என சினிமாவில் தனக்கென ஸ்டைல் வைத்திருப்பது மூலம் சூப்பர் ஸ்டார் ஆக கோலிவுட்டில் தற்போது வரை மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் ரஜினி எந்தவித பின்புறமும் இல்லாமல் சாதாரண பேருந்து நடத்துனராக இருந்து தற்போது இந்த நிலைக்கு வந்திருக்கிறார்.

இவருடைய ஆரம்ப கால சினிமா பயணத்தின் போது அவருடன் பயணித்த நண்பரை பற்றிய சுவாரசியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சென்னையில் ரஜினியுடன் ஒன்றாகத் நடிப்புக் கல்லூரியில் நடிப்பைக் கற்றுக் கொண்டார். இருவரும் ஒன்றாகத்தான் அடையாரில் இருந்து கல்லூரிக்கு செல்வார்களாம்.

Also Read: கடனில் தத்தளித்த நடிகரை முதலாளியாக ஆக்கிய ரஜினி.. தலைவரை சாமியாக கும்பிட்ட சம்பவம்

தமிழில் சினிமாவில் ரஜினி எப்படி சூப்பர் ஸ்டார் ஆகி ஆட்டிப் படைத்தாரோ அதேபோல் தெலுங்கு சினிமாவை ஆட்டிப் படைத்த அவரது நெருங்கிய நண்பர். இவரை 4-வது படத்திலிருந்து மக்கள் தூக்கி வைத்துக் கொண்டாடினார். ஆந்திரா திரையுலகமே இவரைக் கண்டு மிரண்டது .

மெகா சூப்பர் ஸ்டார் ஆக டோலிவுட்டில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் சிரஞ்சீவி, தன்னுடைய டான்ஸ் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தார். ஆந்திரா மைக்கேல் ஜாக்சன் என்று பெயர் எடுத்தவர் இவர்தான். அந்த அளவிற்கு இவர் படத்தில் இவருடைய நடனம் பலரையும் ஆச்சரியத்துடன் பார்க்க வைக்கும். 67 வயதுடைய சிரஞ்சீவி இன்றும் கதாநாயகனாகவே ரஜினி போல் டோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Also Read: சிரஞ்சீவி நடித்த 4 சூப்பர் ஹிட் படங்கள்.. 47 நாட்களிலேயே எடுத்த சபதத்தை முடித்த மெகா ஸ்டார்

அதிலும் இவருடைய 154 ஆவது படமான வால்டர் வீரய்யா திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஆகையால் இந்தப் படத்தின் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது. இவ்வாறு சினிமாவிலும் அரசியலிலும் ஆந்திராவை கலக்கிக் கொண்டிருக்கும் சிரஞ்சீவி தமிழில் ரஜினியுடன் ஆரம்ப காலத்தில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி இவர்களுடைய இருவருடைய நெருக்கம் பலரும் அறிந்திருந்தாலும் அரசியலிலும் அவர்களது பயணம் துவங்கும் என எதிர்பார்த்த நிலையில் ரஜினி அதற்கு பிடி கொடுக்காமல் போனார். இருப்பினும் ரஜினியின் நண்பராக பார்க்கப்படும் சிரஞ்சீவி அவரைப் போலவே தெலுங்கு திரையுலகின் மெகா சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை விட்டுக் கொடுக்காமல் இப்போதும் பயணிக்கிறார்.

Also Read: போர் கொடி தூக்கும் 4 தெலுங்கு சினிமா குடும்பம்.. விஜய் வளர்ச்சிக்கு ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டை