சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் ரஜினியை முன்னோடியாக எடுத்து அவர் செய்யும் விஷயங்களை பின்பற்றி வருகின்றனர். தற்போது ரஜினி மீண்டும் ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக ஒரு விஷயத்தை செய்துள்ளார்.
அதாவது ஒரு முறை ரஜினி மோடியை சந்திக்கும் போது இந்தியாவில் பல கட்சிக் கொடிகள் வந்துவிட்டது. இதனால் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்தமான கொடிகளை ப்ரொபைலில் வைத்துக்கொள்கிறார்கள். ஆனால் தேசிய ஒருமைபாட்டிற்காக எல்லோரும் ஒரு நாள் தேசியக்கொடியை ப்ரோபைல் ஆக வைத்தால் நல்ல இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் நாம் அனைவரும் இதில் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பது தெரியவரும் என மோடியிடம் ரஜினி கூறியுள்ளார். அதை மறக்காத மோடி இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவரும் வருகின்ற 13 ஆம் தேதி முதல் 15ம் தேதி வீட்டில் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தங்களது சமூக வலைத்தள முகப்பு படமாக தேசியக்கொடியை வைக்கவும் கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்று ஹிந்தி, மலையாளம் நடிகர்கள் தங்களது ப்ரொபைலில் தேசியக் கொடியை மாற்றியுள்ளனர். ஆனால் தமிழ் நடிகர்களில் யாரும் இதைப் பின்பற்றவில்லை.
ஆனால் தற்போது வரை செல்வராகவன் போன்ற ஒரு சிலர்தான் தேசியக்கொடியை தங்களது முகப்பு பக்கத்தில் வைத்துள்ளனர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் வீட்டின் முன்பு தேசியக் கொடியை பறக்கவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய ப்ரொஃபைலிலும் தேசிய கொடியை வைத்துள்ளார்.
தற்போது ரஜினியை பார்த்து அவரது ரசிகர்களும் இதை பின்பற்றி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு மீது என்ன கோபம் என்று தெரியவில்லை ரஜினியை தவிர மற்ற டாப் நடிகர்கள் மோடி சொன்னதை பின்பற்றவில்லை. மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு மீது அதிருப்தி இருப்பதால் நடிகர்கள் தங்களது ப்ரோபைல் மாற்றாமல் உள்ளனர் என்று கூறப்படுகிறது..