ராஜமவுலி குடும்பத்தால் பரிபோன ரஜினி பட வாய்ப்பு.. புலம்பி தவிக்கும் டான் பட இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தை இயக்குவது சாதாரண விஷயம் கிடையாது. அதாவது ரஜினியை பொறுத்தவரையில் ஒரு தோல்வி படத்தை கொடுத்தாலும் அவருடன் மீண்டும் கூட்டணி போட மாட்டார். அவரது திரை வாழ்க்கையை எடுத்து பார்த்தாலே தெரியும். இப்படி இருக்கையில் அண்ணாத்த படத்திற்குப் பிறகு நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.

அதாவது பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்னரே ரஜினி படத்தை நெல்சன் இயக்குவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அதன் பிறகு பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் ரஜினி இந்த படத்தில் இருந்து பின்வாங்க தயங்கி ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

Also Read : ராஜமவுலியே கேட்டாலும் 2024 வரை நோ கால் சீட்.. சகட்டுமேனிக்கு நடித்து தள்ளும் 5 நடிகர்கள்

இந்நிலையில் ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதாவது ரஜினி சிபிச்சக்கரவர்த்தியை அழைத்து கதையை கேட்டுள்ளார். அந்த கதை ரஜினிக்கு பிடித்த போக படம் பண்ணலாம் என கூறியுள்ளார்.

ஆனால் திடீரென சிபிச் சக்கரவர்த்தியின் படத்தை ரஜினி நிராகரித்துள்ளாராம். அதாவது சிபி சக்கரவர்த்தி எழுதிய கதைக்கு பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தான் திரைகதை எழுதி உள்ளார். மேலும் ராஜமௌலியின் பாகுபலி படத்திற்கும் இவர் தான் திரைகதை எழுதியிருந்தார்.

Also Read : ஜினியின் 25 வருட சாதனையை முறியடிக்க போராடிய திரையுலகம்.. ஒருவழியாக முறியடித்த ராஜமவுலி

இப்போது சிபிசக்ரவர்த்தியின் கதையில் விஜயேந்திர பிரசாத் தமிழ் படத்திற்கு ஏற்றவாறு கதை எழுதத் தெரியாமல் குழம்பி விட்டாராம். ஆகையால் ரஜினி திரைக்கதையை பார்த்து பயந்து போன இந்த படம் வேண்டாம் என்று சத்தமே இல்லாமல் ஒதுங்கிப் போனதாக கூறப்படுகிறது. ராஜமௌலியின் தந்தையால் தற்போது சிபிச் சக்கரவர்த்திக்கு சூப்பர் ஸ்டாரின் பட வாய்ப்பு பறிபோய்வுள்ளது.

ஆகையால் தற்போது சூப்பர் ஸ்டார் இல்லாமல் வேறு ஒரு ஹீரோ படத்தை இயக்க சிபிச்சக்கரவர்த்தி முன் வந்துள்ளாராம். ஏற்கனவே ரஜினி படத்தை சிபி இயக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இப்போது இந்த வாய்ப்பு கிடைக்காமல் போனதால் அவரது மார்க்கெட் குறைய அதிக வாய்ப்பு உள்ளது.

Also Read : 2022 இல் நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட 8 படங்கள்.. விஜய்யை பின்னுக்கு தள்ளிய ராஜமவுலி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்