என்னால இனி இத்தனை படங்களில் தான் நடிக்க முடியும் போல.. வருத்தத்தில் ரஜினிகாந்த்

40 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இப்போதும் அவருடைய படங்களின் வசூலை வைத்து மற்ற நடிகர்களுக்கு சவால் விடுத்து வருகிறார்.

மாஸ் படங்கள் முதல் அறிவியல் சார்ந்த திரைப்படங்கள் வரை அனைத்தையும் நடித்து விட்டார். இந்நிலையில் தற்போது தன்னுடைய வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் வெளியான கபாலி மற்றும் காலா படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் இடையில் வந்த தர்பார் திரைப்படம் கொஞ்சம் ரஜினியின் மார்க்கெட்டை பதம் பார்த்தது. அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினியின் அண்ணாத்த படம் அவருடைய பழைய படங்களான அருணாச்சலம், படையப்பா போன்ற வரிசையில் மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என இப்போதே கருத்துக்கணிப்புகள் வெளிவந்துள்ளன.

அதுமட்டுமில்லாமல் ரஜினிக்கும் நாளுக்கு நாள் வயதாகிக் கொண்டே செல்வதால் இனியும் பழையபடி சுறுசுறுப்பாக தொடர்ந்து பல படங்களில் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டு விட்டதாம். குறைந்தது இன்னும் இரண்டு படங்கள்தான் செய்ய முடியும் போல என தன்னுடைய வட்டாரங்களில் கூறி ரஜினி வருத்தப்பட்டுள்ளார்.

தற்சமயம் ஒரு படத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்கி வருகிறார் ரஜினி. இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்தவுடன் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளார். அங்கு சென்று அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட பிறகு தான் அடுத்த படங்களில் நடிப்பதைப் பற்றி யோசிக்க உள்ளாராம்.

rajini-cinemapettai-01
rajini-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்