பொதுவாகவே ரஜினிக்கு ஒரு படம் வெளிவர இருக்கின்றது என்றால் அது குறித்து அவர் ரசிகர்களை அழைத்து மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்வார். அதில் ரசிகர்களுடன் போட்டோ எடுப்பது மற்றும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது போன்ற விஷயங்களை செய்வார். மேலும் அவர் படத்தைப் பற்றி அவரது ரசிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொள்வார்.
அந்த வகையில் தற்போது சென்னையில் ஒய்.எம்.சி.ஏ கிரவுண்டில் மினி மாநாடு போடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்கு குறைந்தது ஐந்தாயிரம் பேர் வர இருக்கிறார்கள். ஆனால் உள்துறை 15 ஆயிரம் பேர் வருவார்கள் என கூறப்பட்டு இருக்கிறது. இதற்கு சினிமாவில் உள்ள முக்கிய பிரபலங்களும் வர இருக்கிறார்கள். அத்துடன் சிவகார்த்திகேயனும் வர இருக்கிறார்.
Also read: அடுத்த சூப்பர் ஸ்டாராக பிளான் போடும் விஜய்.. சத்தம் இல்லாமல் தளபதி இடத்தை பறிக்கும் நடிகர்
இந்த மாநாட்டை சரியான முறையில் அதே நேரத்தில் சீக்கிரமாகவும் ஏற்பாடு செய்வதற்கு மொத்த செலவு ஒரு கோடிக்கு மேல் வருகிறதாம். இதற்கான மொத்த செலவையும் செய்வது சோளிங்கர் ரவி தான். இவர் யார் என்றால் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று மிகவும் எதிர்பார்த்து இருக்கக் கூடியவர். தற்போது இவர் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்திருந்தாலும் இந்த மாநாடு நடைபெறுவதற்கான அனைத்து செலவுகளையும் செய்வதற்கு ரெடியாக இருக்கிறார்.
ஆனால் இதற்குப் பின்னணியில் என்ன காரணம் இருக்கும் என்று ரஜினி நன்றாகத் தெரிந்து கொண்டார். அதனால் இந்த மாதிரியான செலவுகள் செய்ய வேண்டாம் அத்துடன் இந்த கூட்டமும் நடைபெறக் கூடாது என்று சொல்லிவிட்டார். ஏனென்றால் அரசியல் வேண்டாம் என்று விலகி இப்பொழுது அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இந்த மாநாடு போட்டால் தேவையில்லாத பேச்சுக்கள் வெளிவரும். மற்றும் ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்துக்கள் வரக்கூடும். அதனால் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாது என்று மாநாட்டை நிறுத்திவிட்டார்.
ஆனால் இவரை எப்பொழுது நேரில் பார்க்கலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இந்த அறிவிப்பு இருக்கிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ரசிகர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். ஆனால் ரஜினியோ இந்த மாநாடு அமைந்தால் இது அரசியல் மாநாடாக மாறிவிடும் என்று பயத்தில் தான் நிறுத்திவிட்டார்.
Also read: இருவரின் பிரிவை தாங்க முடியாத நடிகை.. யாரு கண்ணு பட்டுச்சோ மேடையிலேயே கண்கலங்கிய ரஜினி