அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். நெல்சன் திலிப்குமார் இயக்கும் இந்த படம் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. அதற்கான அனைத்து வேலைகளும் தற்போது மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரஜினி எப்படியாவது இந்த படத்தை வேற லெவல் வெற்றி திரைப்படமாக மாற்ற வேண்டும் என்று சில அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறாராம். அதாவது பீஸ்ட் திரைப்படத்தால் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்த நெல்சன் எப்படியாவது இந்த திரைப்படத்தின் மூலம் தனக்கு கிடைத்த அவப்பெயரை மாற்றிவிட வேண்டும் என்று கவனமாக இருக்கிறார்.
ஆனாலும் அவரை நம்பாத சூப்பர் ஸ்டார் தினமும் அவரை தன் வீட்டிற்கு வரவழைத்து கதை குறித்து ஏகப்பட்ட டிஸ்கஷன் செய்து வருகிறாராம். மேலும் சில விஷயங்களில் அவர் ரொம்பவும் கண்டிப்பாக இருக்கிறாராம். இதனால் நெல்சன் தற்போது கதையில் ஏகப்பட்ட மாற்றங்களை செய்து வருவதாக கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் எப்போது என்ன சொல்லுவாரோ என்ற பயத்திலும் அவர் தத்தளித்துக் கொண்டிருக்கிறாராம். தன்னுடைய வாழ்க்கையில் சூப்பர் ஸ்டாரை எப்படியாவது ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்று நினைத்த நெல்சன் தற்போது தன் நிலையை எண்ணி நொந்து போய் இருக்கிறாராம்.
அந்த அளவுக்கு ரஜினியின் நடவடிக்கைகள் அதிரடியாக இருக்கிறதாம். இதனால் நெல்சன் தன்னுடைய விளையாட்டுத்தனத்தை எல்லாம் மூட்டை கட்டி விட்டு எப்படியாவது இந்த படத்தை ஒரு மாபெரும் வெற்றி படமாக கொடுத்து விட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறாராம்.
ஜெயிலர் படத்தின் டைட்டில் அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது கதையில் சில மாறுபாடுகளை செய்து விரைவில் சூட்டிங் ஆரம்பிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இது குறித்த அப்டேட் விரைவில் வெளியாக இருக்கிறது.