சந்திரமுகி படுத்திய பாடு.. மீள முடியாமல் நடுராத்திரி பூஜை போட்ட சூப்பர் ஸ்டார்

Rajinikanth: பொதுவாக பேய் மற்றும் சாமி சம்பந்தப்பட்ட படங்கள் எடுக்கும் பொழுது ஏதாவது ஒரு அசம்பாவிதமான சம்பவங்கள் நடக்கும் என சொல்வது ஒன்று. வெளிநாடுகளில் ஒரு சில பேய் படங்கள் எடுத்து முடித்து ரிலீஸ் ஆன பிறகு அதன் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் இறந்து விட்டதாக கூட செய்திகள் வெளியாவது உண்டு. பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத அசம்பாவிதமான சம்பவத்தை பார்த்ததாகவும் சிலர் சொல்லி இருக்கிறார்கள்.

இப்படி ஒரு கதை சந்திரமுகி படத்தைப் பற்றியும் சொல்லப்படுகிறது. மணிசித்திரதாழ் என்ற மலையாள படத்தை தழுவி பி வாசு ஆப்தமித்ரா என்னும் பெயரில் கன்னடத்தில் எடுத்திருந்தார். இதில் விஷ்ணுவர்தன் மற்றும் சௌந்தர்யா இணைந்து நடித்திருந்தார்கள்.இந்தப் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்ததால் தெலுங்கில் நாகவல்லி என்னும் பெயரிலும் எடுக்கப்பட்டது.

பாபா படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய அளவில் கம் பேக் கொடுக்க திட்டமிட்டிருந்தார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த கதை இதுதான். சந்திரமுகி என்னும் பெயரில் இந்த கதை தமிழ் உருவாக்கம் செய்யப்பட்டது. 500 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடி இந்த படம் சாதனை படைத்தது. மைசூரு பகுதியில் உள்ள ஒரு அரண்மனையில் நடந்த உண்மை கதை இது என்று கூட சொல்லப்படுகிறது.

Also Read:சூர்யாவின் நடிப்பை பார்க்க மாறுவேடத்தில் சென்ற ரஜினி.. அப்படி என்ன சூப்பர் ஹிட் படம் அது?

இதன் கன்னட வர்ஷனில் ரஜினியின் கேரக்டரில் நடித்தவர் விஷ்ணுவர்தன். அதேபோன்று ஜோதிகா நடித்த கேரக்டரில் நடித்தவர் நடிகை சௌந்தர்யா. இந்த படம் ரிலீஸ் ஆன பின்னர் சௌந்தர்யா எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து விட்டார். அதேபோன்று விஷ்ணுவர்தன் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார்.

பூஜை போட்ட சூப்பர் ஸ்டார்

நாகவல்லி, ராஜ்மோஹோல் ,போள் புலையா என்று நிறைய மொழிகளில் இந்த படம் மறு உருவாக்கம் செய்யப்பட்ட போது அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் அமானுஷ்ய சம்பவங்களை உணர்ந்ததாகவும் ஒரு சில கலைஞர்கள் சொல்லி இருந்தார்கள். சந்திரமுகி சமயத்தில் ரஜினிக்கு எதுவும் தோன்றவில்லை என்றாலும், அதன் பிறகு இந்த சம்பவங்கள் எல்லாம் அவருக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இதற்காக ரஜினிகாந்த் சிறப்பு பூஜை ஒன்றை நடத்தினார் என சொல்லப்படுகிறது. ரஜினிகாந்த் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் இதனால் கூட நடிக்காமல் போய் இருக்கலாம் என தெரிகிறது. இருந்தாலும் அவருடைய ரசிகர்கள் நல்லவேளை அவர் இரண்டாவது பாகத்தில் நடித்து பெயரை கெடுத்துக் கொள்ளவில்லை என்றும் விமர்சித்து வருகிறார்கள்

Also Read:ரஜினியை பார்த்து நடிக்க வந்த 5 கருப்பு நடிகர்கள்.. மனசு வெள்ளை நிரூபித்துக் காட்டிய கேப்டன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்