ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

விஜய், தனுஷை போல ரூட்டை மாற்றிய ரஜினி.. அவ்வளவு அடி வாங்கியும் ஆசை யார விட்டுச்சு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவடைய உள்ளது. இதை முடிந்தவுடன் அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் கெமியோ கதாபாத்திரத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதற்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லோகேஷ் கனகராஜ் இரண்டு படங்களை முடித்துவிட்டு தான் வருவார். அந்த இடைவெளியில் ரஜினி ஒரு பிளான் போட்டிருக்கிறார். சமீப காலமாகவே தமிழ் நடிகர்கள் தெலுங்கு இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் மோகத்தில் உள்ளனர்.

Also Read: அமலாவுக்கு பின் ரஜினியின் காதல் சர்ச்சையில் சிக்கிய கேரளத்து நடிகை.. விவாகரத்து நோட்டீஸ் வரை சென்ற கிசுகிசு!

இந்த மோகம் இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் தொற்றிக்கொண்டது. ஏனென்றால் வம்சி இயக்கத்தில் விஜய்யின் வாரிசு வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷின் வாத்தி, அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியானது.

இந்த படங்களுக்கு எல்லாம் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காவிட்டாலும் தெலுங்கு இயக்குனர்களை கோலிவுட் டாப் நடிகர்கள் நாடி செல்கின்றனர். அவர்களைப் போலவே இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் தன்னுடைய ரூட்டை மாற்றி, தெலுங்கு இயக்குனர் பாபி கொல்லி என்று பிரபலமாக அறியப்படும் கே.எஸ். ரவீந்திரா படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

Also Read: எண்டு கார்டு போடறதுக்குள்ள ஒரு பிரம்மாண்ட வெற்றி கன்பார்ம் .. ரஜினி போடும் பலே திட்டம்

இவர் அண்மையில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான வால்டர் வீரய்யா படத்தை இயக்கியவர். ரஜினி- ரவீந்திரா கூட்டணியில் உருவாகும் படத்தை தயாரிப்பது தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜ். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா படமாக எடுக்கப்படுகிறது. இந்த படம் குறுகிய காலத்தில் எடுத்து வெளியிடப்படும் என கூறப்பட்டிருக்கிறது. தற்போது விஜய், தனுஷ் இவர்கள் வரிசையில் தெலுங்கு இயக்குனர் படத்தில் ரஜினி நடிப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.

தெலுங்கு இயக்குனர்கள் தமிழ் நடிகர்களை வைத்து இயக்கிய படங்கள் அனைத்தும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நன்றாக இல்லை. வசூலில் பயங்கரமாக அடி வாங்கியது, அப்படி இருக்கையில் ரஜினி எதற்காக தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடிக்க விரும்புகிறார் என்று சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் முணுமுணுக்கின்றனர். இருந்தாலும் ஆசை யாரை விட்டது! என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: ரஜினி படத்தை தயாரிக்க போட்டிப் போடும் முதலாளிகள்… எவ்வளவு வேணாலும் சம்பளம் தர நாங்க ரெடி என்கிட்ட கொடுங்க!

- Advertisement -

Trending News