குருவுடன் ரஜினி கொண்டாடும் ஹோலி பண்டிகை.. இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவின் அடையாளமாக உயர்ந்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் எப்போதுமே தனது குருவுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருவார்.

இதற்குப் பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது ரஜினி இந்த உயரத்தை அடைய முக்கியமான காரணமாக இருந்தது இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் தான். ஏனென்றால் ரஜினியை வைத்து அவர் நிறைய படங்களை இயக்கியுள்ளார்.

Also Read : ரஜினியின் சினிமா வாழ்க்கையை மாற்றிய 5 சினிமா நிறுவனங்கள்.. எம்ஜிஆரின் அரசியல் பிரவேசத்தால் நடந்த அதிசயம்

கூத்துப்பட்டறையில் ரஜினியை சிவாஜி ராவ் கெயிக்வாட் இன்று அடையாளத்துடன் தான் சந்தித்தார். அப்போது ரஜினியை பற்றி கருப்பு நிற கன்னட இளைஞன் என்ற ஒரு விஷயம் மட்டும் தான் பாலச்சந்தருக்கு தெரியும். அந்தச் சமயத்தில் ரஜினியின் எனர்ஜி பாலச்சந்தருக்கு ரொம்ப பிடித்து போய் உள்ளது.

ஆகையால் தன்னுடைய அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பாலச்சந்தர் ரஜினிக்கு வழங்கினார். அப்போது சிவாஜி ராவ் என்ற பெயரை மாற்ற பாலச்சந்தர் யோசித்து உள்ளார். ஏனென்றால் ஏற்கனவே சிவாஜி என்னும் கொடி தமிழ் சினிமாவில் பறக்கிறது.

Also Read : ரஜினியின் மிகப்பெரிய தோல்வியை கொண்டாடிய அப்பா, மகன்.. விஜய்யை திரும்ப வச்சு செய்த கர்மா!

எனவே சிவாஜி என்ற பெயர் உனக்கு வேண்டாம், ரஜினிகாந்த் என்ற வைக்கலாம் என பாலச்சந்தர் பெயர் சூட்டி உள்ளார். இந்த பெயர் வர காரணம் மேஜர் சந்திரகாந்த் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தின் பெயர் ரஜினிகாந்த். அதை எண்ணி தான் ரஜினிக்கு இந்த பெயரை பாலச்சந்தர் வைத்துள்ளார்.

அந்தப் பெயர் சூட்டும் விழா நடந்த நாள் ஹோலி பண்டிகை. ஆகையால் அன்றிலிருந்து தவறாமல் பாலச்சந்தர் இறக்கும் வரை இருவரும் ஒன்றாக தான் இந்த விழாவை கொண்டாடி உள்ளனர். மேலும் பாலச்சந்தர் வைத்த பெயருக்கு ஏற்ப புகழின் உச்சிக்கு ரஜினிகாந்த் சென்றார்.

Also Read : பாலச்சந்தருக்கு இணையாக ரஜினியை வளர்த்து விட்ட பிரபலம்.. மறைமுகமாக சூப்பர் ஸ்டார் செய்த காரியம்

- Advertisement -