ஜெயிலரையே அசைத்துப் பார்த்த லியோ.. கலாநிதிக்கு ஃபோன் போட்டு புலம்பி தள்ளிய ரஜினி

Leo-Rajini-Kalanithi Marran: ஜெயிலர் அலப்பறை எல்லாம் ஓய்ந்த நிலையில் தற்போது லியோ திருவிழா ஆரம்பித்து விட்டது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் இன்னும் சில தினங்களில் ரசிகர்களின் பார்வைக்கு வர இருக்கிறது. அதனாலேயே இப்போது சோசியல் மீடியா முழுவதும் விஜய்யின் ஆதிக்கம் தான் நிறைந்து இருக்கிறது.

அந்த வகையில் ட்ரெய்லர், பாடல்கள் என ஒவ்வொன்றும் வரவேற்பை பெற்ற நிலையில் சில சர்ச்சைகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் ரிலீஸ் நாள் அன்று ஏகப்பட்ட கெடுபிடிகள் அரசு தரப்பில் இருந்து வந்து கொண்டிருப்பது ஒரு பக்கம் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கனவே சில காரணங்களால் ஆடியோ லாஞ்ச் ரத்து செய்யப்பட்ட நிலையில் முதல் நாள் முதல் காட்சி எப்போது என்ற ஆர்வம் தான் அனைவருக்கும் இருக்கிறது. அதன்படி ரிலீஸ் தேதியிலிருந்து முதல் ஆறு நாட்கள் அதிகாலை 4 மணிக்கு ஆரம்பித்து மொத்தம் ஆறு காட்சிகள் நடைபெறும் என செய்திகள் வெளியானது.

இதனால் ஸ்பெஷல் ஷோக்கு அனுமதி கிடைத்துவிட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள் இருந்தனர். இது திரையுலகிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. ஏனென்றால் ஜெயிலருக்கு அதிகாலை நான்கு மணி காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை. அப்படி இருக்கும் போது லியோ அதை சாதித்து காட்டி விட்டது.

இது ரஜினிக்கும் வருத்தத்தை ஏற்படுத்திய நிலையில் கலாநிதிக்கு ஃபோன் போட்டு புலம்பி தள்ளி விட்டாராம். தற்போது தலைவர் 170 படப்பிடிப்பில் இருக்கும் அவர் அங்கு இருந்தபடியே போன் செய்து ஜெயிலருக்கும் அதிகாலை காட்சி குறித்து நீங்கள் கூடுதல் முயற்சி செய்திருக்கலாமே என்று ஆதங்கத்தோடு கேட்டாராம்.

இதை சினிமா விமர்சகர் அந்தணன் ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும் லயோவுக்கு ஸ்பெஷல் காட்சி கிடைத்த வருத்தம் ரஜினிக்கு இருப்பதாகவும் கூறி இருக்கிறார். இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் சில விமர்சனங்களும் எழுந்துள்ளது. அந்த வகையில் லியோ ஜெயலரையே மிரள வைத்து விட்டது என்ற ஒரு பேச்சும் கிளம்பியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்