பாலிசியை விட்டுக் கொடுக்காத அஜித், சூர்யா.. ரஜினி, விஜய் கத்துக்க வேண்டிய விஷயம்

Ajith-Suriya-Rajini-Vijay: இப்போது கோலிவுட் வட்டாரத்தில் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ தொழில் போட்டி யாருக்கு இருக்கிறது என்று பார்த்தால் அது ரஜினி, விஜய் மட்டுமாக தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு இவர்களுடைய படங்கள் பாக்ஸ் ஆபிஸை திணற வைத்துக் கொண்டிருக்கிறது.

இப்படி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் இவர்கள் அஜித், சூர்யாவிடம் கத்துக்க வேண்டிய ஒரு விஷயமும் இருக்கிறது. அது மிகவும் வரவேற்கப்பட்டு வரும் ஒரு நல்ல விஷயமாகவும் உள்ளது. அதாவது சமீப காலமாக தமிழில் தலைப்பு கொண்ட படங்கள் வெளிவருவது அதிகமாக இருப்பதோடு ரசிக்கப்பட்டும் வருகிறது.

அதை ஒரு பாலிஸியாகவே இப்போது அஜித், சூர்யா இருவரும் பின்பற்றி வருகின்றனர். அதன்படி மௌனம் பேசியதே, வாரணம் ஆயிரம், ஆதவன், சூரரைப் போற்று, எதற்கும் துணிந்தவன் வரிசையில் இப்போது சூர்யாவின் புறநானூறு பட அறிவிப்பும் வெளியாகி உள்ளது. பெயரே வித்தியாசமாக இருக்கும் நிலையில் கதையும் ஒரு உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாக இருக்கிறது.

அதேபோல் அஜித்தும் இப்போது தமிழில் டைட்டில் வைப்பதையே விரும்புகிறார். அதன்படி வலிமை, துணிவு, விடாமுயற்சி என தலைப்புகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கிறது. இதையே ரஜினி, விஜய் ஆகியோரும் பின்பற்றலாம் என்ற கருத்துக்களும் எழுந்து வருகிறது. ஏனென்றால் பிகில், பீஸ்ட், லியோ என விஜய்யின் பட தலைப்புகள் இந்த வகையறாவாக தான் இருக்கிறது.

அதே போன்று தான் சூப்பர் ஸ்டாரின் பட தலைப்புகளும் இருக்கிறது. அவர்களும் அஜித், சூர்யா மாதிரி வித்தியாசமான டைட்டில்களை தேர்ந்தெடுத்தால் சிறப்பாக இருக்கும். தற்போது விஜய் தளபதி 68 படத்தில் பிசியாகிவிட்டார். அதன் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் நிச்சயம் சயின்ஸ் சம்பந்தமான டைட்டிலாக இருக்கும் என்ற ஒரு கருத்தும் உலா வருகிறது.

ஏனென்றால் படத்தின் கதை அதை தழுவி தான் உருவாகி வருகிறது. அதே போன்று சூப்பர் ஸ்டார் தன்னுடைய 170வது படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்தபடியாக லோகேஷ் உடன் 171வது படமும் உருவாக இருக்கிறது. இதன் தலைப்புகள் அடுத்தடுத்து தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்