வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ரஜினி, விஜய்யால் மார்க்கெட்டை தரமான பிடித்த காமெடியன்.. கைவசம் குவிந்துள்ள அரை டஜன் படங்கள்

Tamil Comedy Actor: தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய்யின் படங்களில் நடிப்பதற்கு நடிகர் நடிகைகள் போட்டி போட்டுக்கொண்டு வரிசை கட்டிக் காத்திருக்கின்றனர். இதற்கு காரணம் இவர்களின் படங்களில் நடித்து தங்களது திறமையை காட்டிவிட்டால், அதன் பின் வெளியில் தெரிந்து தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்துவிடும் என்பது தான்.

அப்படித்தான் இரண்டு காமெடி நடிகர்கள் ரஜினி, விஜய் படத்தில் நடித்து தங்களின் மார்க்கெட்டை தரமாக நிலை நிறுத்திக் கொண்டனர். ‘இதெல்லாம் ஒரு மூஞ்சியா!’ என தொடக்கத்தில் ஏகப்பட்ட உருவக்கேலிக்கு ஆளானவர்தான் நடிகர் யோகி பாபு.

காமெடி நடிகராக படிப்படியாக முன்னேறிய யோகி பாபுவுக்கு தான் இப்போது தமிழில் மார்க்கெட் அதிகம். கிட்டத்தட்ட 9 படங்களில் ஒரே சமயத்தில் நடித்து வருகிறார். அந்த அளவிற்கு பிஸியாக இருக்கக்கூடிய யோகி பாபுவின் மார்க்கெட் உயர்வதற்கு காரணம் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் உடன் ஜெயிலர் படத்தில் இணைந்து நடித்தது தான்.

இந்தப் படத்தின் மூலம் யோகி பாபு-க்கு அக்கட தேசமாகிய தெலுங்கானாவில் தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. அங்கேயும் 6 படங்களில் கமிட் ஆகியுள்ளார். இப்பொழுது தமிழ், தெலுங்கு என யோகி பாபு ரொம்ப பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் மட்டுமல்ல விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் இணைந்து நடித்த காமெடி நடிகர் விடிவி கணேஷ் அக்கட தேசங்களில் கொண்டாட்டப்பட்டு வருகிறார்.

இவருடைய நடிப்பு பிடித்து போனதால் தெலுங்கிலும் விடிவி கணேஷ் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரின் மார்க்கெட் தென்னிந்திய அளவில் டாப் கீரில் சென்று கொண்டிருக்கிறது. இதெல்லாம் ரஜினி, விஜய் படங்களில் நடித்த பிறகுதான் கிடைத்திருக்கிறது.

‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்பது போல், தற்போதைய சூழலில் ஹீரோக்களை விட இந்த இரண்டு காமெடியன்ஸ் தான் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்த வருகின்றனர். இனிமே வரும் எல்லா படங்களிலும் பெரும்பாலும் இவர்களை தான் காமெடியன்களாக பார்க்க முடியும்.

- Advertisement -

Trending News