அடுத்தடுத்து வரிசைகட்டி நிற்கும் ரஜினி, கமல் படங்கள்.. மீண்டும் மோதிக் கொள்ளும் உலக நாயகன், சூப்பர் ஸ்டார்

கோலிவுட்டில் கொடி கட்டி பறக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இருவரும் அன்று முதல் இன்று வரை 60 வயதை தாண்டியும் கதாநாயகன்களாக நடித்து கலக்கி கொண்டிருக்கின்றனர். இவர்கள் அடுத்தடுத்து கமிட் ஆகும் படங்களின் லிஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாக பேசப்படுகிறது.

கமலஹாசன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் இந்தியன் 2 படத்திற்குப் பிறகு எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அரசியல் கலந்த நையாண்டி படமாக எடுக்க உள்ளனர். அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த விக்ரம் படத்தின் 2ம் பாகத்தில் கமல் நடிக்கப் போகிறார்.

Also Read: தீபாவளி ரிலீஸ், அதிக எதிர்பார்ப்பை கிளப்பி, பல்ப் வாங்கிய 6 படங்கள்.. கமலை மிஞ்சிய ரஜினி

இதன்பின் மகேஷ் நாராயணன் மற்றும் பா. ரஞ்சித் இயக்கும் மற்றொரு படத்திலும் கமல் நடித்த கமிட் ஆகியுள்ளார். இதேபோன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ரஜினி கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறார். லால் சலாம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

Also Read: தீபாவளியன்று ரிலீசான 6 படங்கள்.. கமல், ரஜினியுடன் போட்டியிட்டு ஜெயித்த விஜயகாந்த், பாக்யராஜ்

இது ரஜினியின் 170 ஆவது படமாக அமைய உள்ளது. இதற்கு அடுத்தபடியாக இளம் இயக்குனரான சிபி சக்கரவர்த்தி கதையில் ரஜினி நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்க இருக்கிறது.

அடுத்ததாக ரஜினி மணிரத்னம் படத்தில் நடிக்க உள்ளார். மணிரத்னம் ரஜினியை வைத்து தளபதி போன்ற கதைய அம்சத்தை கொண்டு ஒரு படத்தை எடுக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது.

Also Read: அசால்டாக ஒரு கோடி கொடுத்த கமல்.. காசு இல்ல உழைப்பை தரேன் என ஒதுங்கிய ரஜினி

இவ்வாறு கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் அடுத்தடுத்து வரிசையாக அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் மறுபடியும் முன்பு போல் விட்டுக் கொடுக்காமல் மோதிக்கொண்டு ரசிகர்களை குஷி படத்தை காத்திருக்கின்றனர்.

- Advertisement -