சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விஜயகாந்த் பட ரீமேக்கில் நடித்த ரஜினி, கமல்.. மாஸ் காட்டிய வசூல்

80களில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்டோர் தங்களுக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்தனர். இதனால் இவர்களது படங்கள் அனைத்தையும் அவர்களுடைய ரசிகர்கள் திரையரங்கில் திருவிழா போல் கொண்டாடுவார்கள்.

இந்த நிலையில் 1981 ஆம் ஆண்டு எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இதனால் இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் ரஜினிகாந்த் அறிமுகமாகி நடித்திருந்தார்.

Also Read: கதாநாயகி தான் ஹீரோவே.. அந்த படத்தில் முதல் முதலாக இணைந்த சூப்பர் ஸ்டார், கேப்டன், சத்யராஜ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமல்ல அதே சட்டம் ஒரு இருட்டறை படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்யும் போது அதில் உலக நாயகன் கமலஹாசன் நடித்திருந்தார். எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய இந்த படம் அனைத்து மொழிகளிலும் அந்த நேரத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது.

இந்த படங்களில் மலையாளத்தை தவிர மற்ற மொழிகளில் உள்ள ஹீரோக்களின் பெயர் விஜய் என்பதால், அதையே தன்னுடைய மகனுக்கு வைத்தார் எஸ்ஏ சந்திரசேகர். அந்த அளவிற்கு சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் எஸ்ஏசி-க்கு மறக்க முடியாத படமாக அமைந்தது.

Also Read: 43 வயது நடிகருக்கு ஜோடி போட்ட 15 வயது நடிகை.. சூப்பர் ஸ்டாரை வியக்க வைத்த சம்பவம்

தமிழில் இந்தப் படத்தை பார்த்த பிறகு உலக நாயகன் மற்றும் சூப்பர் ஸ்டார் இருவரும் நடிக்க முடியாமல் போனதே என கலங்கினார்களாம். அதனால் தான் எஸ்ஏசி அவர்களை வைத்து ஹிந்தி மற்றும் மலையாளங்களில் ரீமேக் செய்து வசூலிலும் மாஸ் காட்டினார்

இவ்வாறு தமிழில் கேப்டன் விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு இருட்டறை படத்தை தான் ரஜினி, கமல் இருவரும் பிற மொழிகளில் நடித்து பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டி இருக்கின்றனர் என்ற விஷயத்தை வைத்து கேப்டன் ரசிகர்கள் 20 வருடங்களுக்குப் பிறகு, இப்போது சோசியல் மீடியாவில் கெத்து காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: சினிமாவை கலக்கி ஓய்ந்து போன 2 பிரபலங்கள்.. விஜயகாந்துக்கு கொடுத்த நான்கு த்ரில்லர் ஹிட்ஸ்

- Advertisement -

Trending News