இதுக்காகதான் திருமணம் செய்தேன்.. பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி ரஜினி பட நடிகை.!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பின்னரே ராதிகா ஆப்தே தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்படம் வெற்றி பெற்ற போதிலும் ராதிகா ஆப்தேவிற்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவிலான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வந்த ராதிகா அவ்வபோது சில சர்ச்சைகளை கிளப்பி வருவார்.

அதன்படி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவது, தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் தனக்கு தொல்லை அளித்ததாக புகார் கூறியது என எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி கொண்டே இருப்பார்.

அந்த வரிசையில் தற்போது புதிதாக ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராதிகா ஆப்தே, “இங்கிலாந்தை சேர்ந்த பெனடிக் டைலர் எனும் இசை கலைஞரை கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் திருமணம் செய்து கொண்டேன்.எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை.

நம்பிக்கை இல்லாமல் எதற்காக திருமணம் செய்தீர்கள் என்று நீங்கள் என்னை கேட்கலாம். வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டால் மிக எளிதாக விசா கிடைத்துவிடும் என்பதால், விசா வாங்குவதற்காகவே நான் திருமணம் செய்தேன். எப்போது என் கணவரை பார்க்க வேண்டிய நேரம் வருகிறதோ அப்போது மட்டும் அவரை நேரில் சென்று சந்தித்து வருகிறேன்” என கூறியுள்ளார்.

ஒரு விசா பெறுவதற்காக திருமணம் செய்தேன் என முன்னணி நடிகை கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் திருமணம் என்பது மிகவும் புனிதமான ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர் இப்படி கூறியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்