RRR படத்திற்கு விழுந்த முதல் அடியிலேயே ஆடிப்போன ராஜமௌலி.. பாகுபலியில பாதி கூட வராது போலையே!

பாகுபலி படங்களின் மூலம் உலகளவில் பிரபலமான ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) என்ற படம் கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

சுதந்திர போராட்ட கால கட்டத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் நெருங்கிய நண்பர்கள் வேடத்தில் நடித்து வருகின்றனர். மேலும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட் போன்றோரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு கம்மியாக இருப்பதை உணர்ந்த பட குழுவினர் சமீபத்தில் நட்பு எனும் பிரமோஷன் பாடலை வெளியிட்டனர். இந்த பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியானது.

கண்டிப்பாக நட்பு பாடல் வெளியாகி யூடியூபில் மிகப்பெரிய சரித்திர சாதனை படைக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த படக்குழுவினருக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் மிகக் குறைவான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

முன்னதாக பாகுபலி படங்களின் ஒவ்வொரு அறிவிப்பு வெளியாகும் போதும் ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு இல்லையே என ராஜமௌலிக்கு ஆதங்கம் அதிகமாக இருக்கிறதாம். போதாக்குறைக்கு படமும் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு அதைவிட அதிக அளவில் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்தால் பாகுபலி வசூலில் பாதி கூட வராது போல என கவலையில் உள்ளார்களாம். இருந்தாலும் RRR படத்தின் டீசர், டிரெய்லர் போன்றவற்றை பிரம்மாண்டமாக வெளியிட்டு எப்படியாவது போட்ட காசை எடுத்து விடலாம் என தயாரிப்பாளருக்கு தைரியம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம் ராஜமௌலி.

RRR-cinemapettai
RRR-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்