பாடல் வெளியீட்டு விழாவில் மன்னிப்பு கேட்ட ராஜமௌலி.. இது தான் காரணமாம்

ராஜமௌலியின் இயக்கத்தில் பாகுபலி திரைப்படத்தில் இரண்டு பாகங்களும் உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படம் வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்தது. தற்போது ராஜமௌலி ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கியுள்ளார்.

ஆர்ஆர்ஆர் என்பது ரத்தம், ரணம், ரௌத்திரம் என்பதை குறிக்கிறது. மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் வெளியாகயுள்ளது. இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார்கள்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
தமிழில் ஆர்ஆர்ஆர் படத்தை லைகா புரொடக்ஷன் நிறுவனம் வெளியிடுகிறது. தமிழில் இப்படத்திற்கு மதன் கார்கி வசனம் எழுதியுள்ளார்.

ஆர்ஆர்ஆர் படத்தில் உயிரே பாடல் வீடியோ வெளியானது. இந்தப் பாடலை வெளியிட்டு பேசிய ராஜமௌலி முதலில் இரண்டு மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறினார். முதலில் நான் பேசும் தமிழ் தவறாக உள்ளது என்றும் இன்னும் சரியாக தமிழ் பேச வரவில்லை என்று மன்னிப்பு கேட்டார்.

மூன்று, நான்கு வருடங்களுக்கு பிறகு பிரஸ்மீட் எதுவும் வைக்காமல், உங்களது கேள்விக்கு பதிலளிக்காமல் நான் மட்டும்தான் பேசிக்கொண்டிருக்கிறான் அதற்காக இரண்டாவது மன்னிப்பும் கேட்டார். அதன்பிறகு ஆர்ஆர்ஆர் படத்தின் உயிரே பாடலை பற்றி விவரித்தார்.

அதன்பின், கடைசியாக மதன் கார்கி உயிரே பாடலை கேட்கும்போது கண்ணீர் சிந்த ரசித்தார். கார்கி இப்பாடலுக்கு அருமையான வரிகளை தந்துள்ளார். இதை இன்னும் இந்த உலகிற்கு காட்டவில்லை. இதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியாக உள்ளது என ராஜமௌலி தெரிவித்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்