எல்லாமே அஜித்திடம் அதிகமாகத்தான் இருக்கும்.. வெளிப்படையாக கூறிய இயக்குனர்

தமிழ் சினிமாவில் நீ வருவாய் என என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜகுமாரன். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் குறைந்த அளவில் இருந்தாலும் அனைத்து படங்களும் வெற்றி பெற்றன. ஆனால் தற்போது இயக்குனராக கவனத்தைச் செலுத்தாமல் நடிகராக ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட கடுகு படத்தில் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். அதன் பிறகு தற்போது இவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ராஜகுமாரனிடம் அஜித்குமார் பற்றி பல்வேறு கேள்விகள் எழுப்பப் பட்டது.

அதற்கு வெளிப்படையாக அனைத்து கேள்விக்கும் பதில் அளித்தார். முதலில் அஜித்தை பற்றி கூறுங்கள் என சொன்னதற்கு அஜித் ஒரு சிறந்த மனிதர் எனவும் மேலும் எப்போதுமே ஜாலியாக இருக்க கூடியவர் எனவும் கூறினார்.

மேலும் பிடிவாத குணம் அதிகம் என தெரிவித்தார். அதாவது ஒரு முறை ஒரு படத்தின் காட்சியில் அஜித்குமார் கோட் ஷர்ட்க்கு டை கட்டுவது போல் படத்தில் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. அப்போது இயக்குனர் அந்த காட்சியை பலமுறை எடுத்துள்ளார். மேலும் அஜித்திடம் டையைக் கட்ட தெரியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

raja kumaran
raja kumaran

ஆனால் அஜித் கோபப்படாமல் ஆறு, ஏழு முறை டை கட்டியுள்ளார். அதற்கு என்ன காரணம் என பின்பு தான் புரிந்தது என தெரிவித்தார். அதாவது அஜித்குமார் மெடிக்கல் மற்றும் பல கம்பெனிகளில் பணியாற்றியுள்ளார். எப்படியும் கம்பெனிக்கு செல்லும்போது டைகட்டி தான் செல்ல வேண்டும். அப்படி இருக்கும்போது எனக்கு டை கட்ட தெரியாதா? என்பதை மறைமுகமாக சொல்லவே ஆறு, ஏழு முறை டேக் செய்து பின்பு நடித்ததாக தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஒன்மோர் டேக் எடுத்தாலும் அஜித்திற்கு பிடிக்காது என தெரிவித்துள்ளார். அதாவது எத்தனை முறை கிடைத்தாலும் ஒரே மாதிரியான நடிப்பை தான் வெளிப்படப் போகிறது. அப்படி இருக்கும்போது எதற்கு இத்தனை முறை ரீடேக் என்பதை மறைமுகமாக நடிப்பில் காட்டுவார் என தெரிவித்தார்.

இதுபோல் ஒரு சில பிடிவாத குணம் அவரிடம் உள்ளது. மேலும் அஜித்திடம் குழந்தைத்தனமும் அதிகமாக இருக்கும், பிடிவாதம் அதிகமாக இருக்கும் எல்லாத்திலும் இவர் அதிகமாக இருப்பதால் தான் இவருக்கு அல்டிமேட் ஸ்டார் என பெயர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்