ஒரே செயலால் கவனத்தை ஈர்த்த தேவயானி.. திரும்பி பார்க்க வைத்த சம்பவம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தேவயானி. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீப காலமாக நல்ல வரவேற்பை பெற்றன. அதனால் தற்போது ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

சினிமாவில் ஆரம்ப காலத்தில் தேவயானிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர் குறிப்பாக இவருடைய அமைதியான நடிப்பு ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

தேவயானி நடித்த படங்கள் அனைத்துமே குடும்ப பாங்கான ரசிகர்களுக்கு திருப்திபடுத்தியது. அதற்கு காரணம் அவருடைய எதார்த்தமான நடிப்பும் வசனங்களும் தான். தேவயானி இயக்குனர் ராஜகுமாரன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இவர் படங்களில் நடிக்காமல் இருந்தார்.

rajakumaran devayani
rajakumaran devayani

ராஜகுமாரன் ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் அடுத்து சாந்தி பாளையம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். சொந்த ஊருக்கு அடிக்கடி செல்லும் போது மாத்தூரில் நிலம் ஒன்று வாங்கி அதில் விவசாயம் செய்து வருகின்றனர். திரைத்துறையில் இருக்கும் பலரும் பல்வேறு தொழிலில் ஈடுபடும் போது இவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தாலும் பலரும் இவர்களது எண்ணத்தை பாராட்டி வருகின்றனர்.

அதாவது அவர்களது தோட்டத்திற்கு அருகே 2 ஏக்கர் விற்பதற்காக பிளாட்டுகளாக வாங்கி விற்க முயற்சி செய்துள்ளனர். இதனை அறிந்த ராஜகுமாரன் மற்றும் தேவயானி இருவரும் விவசாய நிலத்தை கொடுக்க வேண்டாம் எனக் கூறி மேலும் அந்த நிலத்தை வாங்கி தற்போது விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது இவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களையும் மரியாதையும் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்