பட வாய்ப்புக்காக படுகவர்ச்சி காட்டும் ரைசா.. இதுவும் ஒரு திறமை தானே

Riza-Cinemapettai.jpg
Riza-Cinemapettai.jpg

சமீபகாலமாக மாடலிங் துறையில் இருக்கும் பிரபலங்கள் சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறார்கள். அதேபோல் மாடலிங் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தவர் ரைசா வில்சன். கல்லூரி படிக்கும் போதிலிருந்தே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். இவர் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடிகை காஜோலுக்கு உதவியாளராகவும் நடித்திருந்தார்.

அதற்குபிறகு, ரைசா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சிக்குப் பின் இவருடன் பிக்பாஸில் பங்குபெற்ற ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பிறகு தனுசு ராசி நேயர்களே, வர்மா போன்ற படங்களில் நடித்து இருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து ஜி வி பிரகாஷ் உடன் காதலிக்க யாருமில்லை, நடிகர் விஷ்ணு விஷாலுடன் எஃப் ஐ ஆர், நடிகர் பிரபுதேவாவுடன் பொய்க்கால் குதிரை, சூர்ப்பனகை மற்றும் தி சேஸ் போன்ற திரைப்படங்களில் ரைசா நடித்து வருகிறார்.

raiza wilson
raiza wilson

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி அவர் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்.சமீபத்தில் அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.

raiza-wilson
raiza-wilson

பல படங்களை கைவசம் வைத்துள்ள ரைசா தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் பட வாய்ப்புக்காக இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என பயில்வான் ரங்கநாதன் கூறிவருகிறார். ஆனால் மாடலிங் துறையில் இருந்து வந்ததால் இது போன்ற கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

Advertisement Amazon Prime Banner