ரைசா செம டுபாக்கூர்.. மூஞ்சி வீங்கியதுக்கு காரணமே வேறயாம்.. மானத்தைக் கெடுத்துவிட்ட டாக்டர்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ரைசா வில்சன்(raiza wilson) சமீபத்தில் தன்னுடைய முகத்தில் வேண்டுமென்றே மாற்றி அறுவை சிகிச்சை செய்து விட்டதாக ஒரு பெண் மருத்துவர் மீது புகார் தெரிவித்து ஒரு கோடி ஆட்டையை போடலாம் என நினைத்துள்ளார்.

சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரைசா வில்சன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் நாயகியாக மாறினார்.

அதன் பிறகு பெரிய அளவு பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் சமீபத்தில் தன்னுடைய முகத்தை அழகாக மாற்ற ஒரு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

அப்போது டாக்டர்கள் அறிவுரைப்படி மது அருந்தக்கூடாது, புகைபிடிக்கக் கூடாது என்றெல்லாம் கட்டளை தெரிவித்துள்ளனர். ஆனால் ரைசா, அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே மது அருந்தியுள்ளார்.

இதன் காரணமாக அவரது முகம் வீங்கி பார்ப்பதற்கு அலங்கோலமாக மாறிவிட்டார். அழகுக்கு ஆசைப்பட்டு தன்னுடைய முகம் போய்விட்டதே எனவும், இனிமேல் பட வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகத்தில் எப்படியாவது அந்த டாக்டர் மீது பழியைப் போட்டு ஒரு கோடி நஷ்ட ஈடு வாங்கிவிட வேண்டும் எனவும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனை அந்தப் பெண் மருத்துவர் சமீபத்தில் நேரடியாகவே பத்திரிகையாளர்களை அழைத்து ரைசா வீங்கியதற்கு காரணம் அவர் சரக்கு அடித்ததுதான் என ஓபன் ஆக தெரிவித்துள்ளார். சும்மாவே சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் வச்சு செய்வார்கள், இது கிடைத்தால் விடுவார்களா. சும்மா சரவெடி போல் இணையத்தில் மீம்ஸ் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

raiza-face-surgery-issue
raiza-face-surgery-issue
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்