ராகுல் காந்தி உருகி உருகி காதலித்த அந்த பெண்.. சூழ்ச்சிகளால் தனிமையில் இருக்கும் நேருவின் வாரிசு

Rahul Gandhi: ராகுல் காந்தி என்ற ஒரு பெயர் இப்போது இந்திய மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருக்கிறது. கடந்த இரண்டு தேர்தல்களில் பெரும்பான்மையை நிரூபித்து சிங்க நடை போட்டுக் கொண்டிருந்தார் நரேந்திர மோடி.

ஆனால் இந்த வருட தேர்தலில் கூட்டணி கட்சிகளை நம்பி இருக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பதற்கு காரணம் ராகுல் காந்தி தான். எம்பி தேர்தலில் நின்ற வயநாடு மற்றும் ரேபரலி இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார் ராகுல் காந்தி.

நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி வரிசையில் இன்று ராகுல் காந்தி துளிர்விட தொடங்கி இருக்கிறார். ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கை தற்போதைய ஏறுமுகமாக இருந்தாலும் அவருடைய சொந்த வாழ்க்கையில் சொல்லப்படாத சோகக் கதை ஒன்றும் இருக்கத்தான் செய்கிறது.

ராகுல் காந்தி உருகி உருகி காதலித்த அந்த பெண்

அவருடைய தங்கை பிரியங்கா திருமணம் செய்து குழந்தை குட்டிகளோடு சந்தோஷமாக இருக்கிறார். ஆனால் 40 வயதை கடந்த ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளவில்லை. ராகுல் காந்தி மட்டும் ஓகே சொன்னால் எத்தனையோ பெண்கள் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு அவரை திருமணம் செய்து கொள்ள முன்வருவார்கள்.

ஆனால் ராகுல் அதை செய்யவில்லை. இதற்கு அவருடைய காதல் தோல்வியும், காதலியை மறக்க முடியாத சோகமும் தான் காரணம் என சொல்லப்படுகிறது. 1998 ஆம் ஆண்டுகளில் ராகுல் காந்தி ஸ்பெயின் சேர்ந்த வெரோனிகா என்னும் பெண்ணை காதலிப்பதாக சொல்லப்பட்டது.

இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் வெளியானது. இவர்கள் இருவரும் கேரளாவில் தங்கியிருந்து அங்குள்ள இடங்களை சுற்றிப் பார்த்தது எல்லாம் மீடியாவில் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் அதன் பின்னர் வெரோனிகா என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

தற்போது இதற்கு பின்னணியாக அரசியலை சொல்கிறார்கள். அதாவது இந்திராகாந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் அரசியலின் எதிர்காலமாக இருந்தார். அப்போது அவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சோனியா காந்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

என்னதான் இந்திய முறைப்படி திருமணம் நடந்திருந்தாலும், சோனியா காந்தி இந்திய பெண்ணாகவே மாறி இருந்தாலும் தாலி நாட்டுக்காரரை திருமணம் செய்தவர் என்ற பெயர் ராஜீவ் காந்தியின் மீது இருந்து அழியவே இல்லை.

ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பிறகு அயல் நாட்டவர் எங்களை ஆளக்கூடாது என்று சோனியா காந்தியை அரசியலில் இருந்து துரத்துவதற்கு பல திட்டங்களை எதிர்க்கட்சிக்காரர்கள் போட்டார்கள். சோனியா காந்தி நினைத்திருந்தால் தன் இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு இத்தாலி நாட்டிற்கு சென்றிருக்கலாம்.

ஆனால் தான் திருமணம் செய்து வந்த அரசியல் குடும்பத்தின் கவுரவத்தை காப்பாற்றவே இன்று வரை அயராது போராடிக் கொண்டிருக்கிறார். இளம் வயதிலேயே கணவனை இழந்து இரண்டு பிள்ளைகளையும் இந்த அரசியல் தந்திரங்களில் காப்பாற்றி வருவதற்கே சோனியா காந்திக்கு ராயல் சல்யூட் செய்யலாம்.

அப்படி இருக்கும் பட்சத்தில் ராகுல் காந்தி ஒரு வெளிநாட்டுப் பெண்ணை மணந்து கொண்டு வந்து மீண்டும் அந்த குடும்பத்தின் மீது நெகட்டிவ் விமர்சனத்தை கொண்டு வந்து விடக்கூடாது என்பதில் அவருடைய கட்சிக்காரர்களை உறுதியாக இருந்தார்கள்.

சோனியா காந்திக்கும் இதன் உடன்பாடு இல்லை. குடும்பத் தன்மானம், மற்றும் அரசியலுக்காக தன் காதலை தியாகம் செய்திருக்கிறார் ராகுல் காந்தி.

Next Story

- Advertisement -