மோடிக்கு தோல்வி பயம்.. இஸ்லாமிய சர்ச்சை பேச்சுக்கு ராகுல் காந்தி கண்டனம்

Rahul Gandhi: நாடாளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 அன்று நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்ட வாக்குப்பதிவு வரும் 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இதற்கான பிரச்சாரத்தில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதில் பிரதமர் நேற்று ராஜஸ்தானில் பேசிய பேச்சு தற்போது கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.

அதாவது காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு தான் முதல் உரிமை என கூறினார்கள். யாரிடம் இருந்து அதை எடுத்து கொடுப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை இப்படி பறி கொடுக்கப் போகிறீர்களா? காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இப்படித்தான் இருக்கிறது என மோடி பிரச்சாரக் கூட்டத்தில் பேசியிருந்தார்.

மோடிக்கு ராகுல் காந்தி கண்டனம்

இதற்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்ததோடு தேர்தல் அறிக்கையின் எந்த இடத்திலும் நாங்கள் அதை குறிப்பிடவில்லை. முடிந்தால் நிரூபித்து காட்டுங்கள் என கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் ராகுல் காந்தி, மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் இது போன்ற பொய்களை அவர் கூறுகிறார். இதன் மூலம் மக்களை திசை திருப்புகிறார்.

காங்கிரசுக்கு ஆதரவு பெருகி கொண்டிருப்பதை அவர்களால் தாங்க முடியவில்லை என்று கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். மேலும் திமுக சார்பிலும் ஓட்டுக்காக இப்படி எல்லாம் பேசலாமா என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவில் பொதுமக்களும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் பாஜகவுக்கு ஓட்டு போடக்கூடாது என்ற ஹாஸ் டேக்குகளையும் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்