ரகுவரனின் 15 வது நினைவு நாள்.. வேதனையுடன் ரோகினி போட்ட ட்விட்

ஒரு காலகட்டத்தில் வில்லன் நடிகர் என்றாலே அது ரகுவரன் தான். நல்ல உயரம், கரகரப்பான குரல் வளமும் கொண்டவர் என்பதால் வில்லன் கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தி இருந்தார். அதுவும் ரஜினியின் பாட்ஷா படத்தில் இவர் நடித்த மார்க் ஆண்டனி கதாபாத்திரம் இப்போதும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.

அதன் பின்பு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 1996 ஆம் ஆண்டு நடிகை ரோகினியை ரகுவரன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரிஷி என்ற ஒரு மகனும் பிறந்தார். ஆனால் சில காரணங்களினால் 2004ல் ரோகிணி ரகுவரனிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

Also Read : ரோகினிக்கு முன்பே பிரபல நடிகையை காதலித்த ரகுவரன்.. பல வருடம் கழித்து வெளியான உண்மை

அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு ரகுவரன் இந்த மண்ணுலகை விட்டு சென்றார். அவரின் மரணத்திற்கு புகைப்பிடித்தல் மற்றும் மது பழக்கம் தான் காரணம் என்று சினிமா வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறினர். மேலும் ஒரு நல்ல திறமையான நடிகரை தமிழ் சினிமா இழந்தது.

இந்நிலையில் ரகுவரன் இறந்து இன்றுடன் 15 வருடங்கள் ஆகிறது. அதை எண்ணி மனம் உருகி ரோகினி ரகுவரன் ஒரு ட்வீட் போட்டுள்ளார். நடிகை ரோகிணி பெண்களுக்கு ஆதரவாக பல மேடைகளில் தொடர்ந்து பேசி வருகிறார். ரகுவரனை பிரிந்தாலும் அவர் மீது அதிக அன்பு வைத்திருக்கக் கூடியவர்.

Also Read : நல்ல கதை, ஹீரோ அமைந்தும் படுதோல்வியான படம்.. ரகுவரன் நடிப்பில் அசத்தியும் பயனில்லை

பல ஊடகங்களில் ரோகினி பேசும்போது தனது கணவனை பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார். இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் மார்ச் 19ஆம் தேதி 2008 ஆம் ஆண்டு எனக்கும், என் மகன் ரிஷிக்கும் சாதாரண நாளாக தொடங்கியது. கடைசியில் எல்லாம் மொத்தமாக மாறியது.

இப்போது மட்டும் ரகு இருந்திருந்தால் சினிமாவை பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். அவரும் ஒரு நடிகர் என்பதில் பெருமை கொண்டு இருப்பார் என ரோகினி பதிவிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் ஒரு நல்ல நடிகன் ரகுவரன் நம்மை விட்டு பிரிந்து 15 வருடங்கள் ஆகிறதா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read : முட்டி போட்டு நடித்த ரகுவரன்.. பல வருடங்களுக்குப் பிறகு சீக்ரெட்டை உடைத்த ரேவதி

- Advertisement -spot_img

Trending News