பாலாவுக்கு புது வாழ்வு கொடுத்த ராகவா மாஸ்டர்.. TVK-க்கு ஸ்கெட்ச் போடும் ஜிகர்தண்டா கிளப் தலைவர்

Actor Raghava Lawrence: ராகவா லாரன்ஸ் மற்றும் விஜய் டிவி பாலா தான் இப்போது சோஷியல் மீடியா ட்ரெண்டிங் ஆக இருக்கின்றனர். கஷ்டப்படுகிறவர்களுக்கு தேடி தேடி போய் இவர்கள் செய்து வரும் ஒவ்வொரு விஷயமும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

ஏற்கனவே பாலா பல உதவிகளை செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவருக்கே ஒரு புது வாழ்வு கொடுத்திருக்கிறார் ராகவா மாஸ்டர்.

kpy-bala
kpy-bala

அதன்படி தற்போது பாலா ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். ஏற்கனவே லாரன்ஸ் இதை ஒரு மேடையில் கூறியிருந்தார. இயக்குனர் நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள் என்றார்.

பாலாவுக்கு வாழ்க்கை கொடுத்த மாஸ்டர்

அப்பொழுது தான் பாலாவால் நிறைய உதவிகள் செய்ய முடியும் எனவும் கூறியிருந்தார். அதன்படி தற்போது சொன்னதை செய்துள்ளார் லாரன்ஸ்.

இதை பாலா வீடியோவாக வெளியிட்டு தன் நன்றியை தெரிவித்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க விஜய் கட்சியில் இவர்கள் இருவரும் இணைகிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

bala-lawrence
bala-lawrence

ஏனென்றால் சமீபத்தில் விஜய் கட்டிய கோவிலுக்கு மாஸ்டர் சென்றிருந்தார். அப்போதே இந்த பேச்சு ஆரம்பித்தது. அதை தொடர்ந்து தற்போது லாரன்ஸ் உடன் பாலா பயணிப்பதை பார்த்து அரசியலுக்கான முன்னோட்டமா என்றும் பேசப்பட்டது.

அந்த வகையில் இருவரும் விஜய் கட்சியில் இணைந்து மக்களுக்கு நல்லது செய்யும் திட்டத்தில் இருக்கிறார்கள் என திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. விரைவில் இது அதிகாரப்பூர்வமாக உறுதியானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்