கெத்து காட்டும் ராகவா லாரன்ஸ்.. தோல்வி இயக்குனரை தூக்கி விடுவதற்காக எடுக்கப்போகும் ரிஸ்க்

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன கலைஞர் என பன்முகம் கொண்ட ராகவா லாரன்ஸ் மாஸ்டர். தற்போது இவர் பிரபல தோல்வி இயக்குனரின் 2ம் பட பாக திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். பைவ் ஸ்டார் கதிரேசன் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

முனி,காஞ்சனா,சீரிஸ் உள்ளிட்ட நகைச்சுவை கலந்த ஹாரர் திரில்லர் படங்களில் நடித்து வரும் லாகவா லாரன்ஸ் ஜிகர்தண்டா 2 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது நடித்து வரும் ருத்ரன் திரைப்படத்தை தயாரிக்கும் கதிரேசன் ஜிகர்தண்டா 2 படத்தையும் தயாரிக்க உள்ளார். மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை எழுத ஆரம்பித்து விட்டதாக சமீபத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருந்த நிலையில் படப்பிடிப்புக்கான தொடங்குவதற்கான தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

2016ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் கூட்டணியில் கதிரேசன் தயாரிப்பில் ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. அதுமட்டுமின்றி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பாபி சிம்ஹா இந்த படத்திற்காக பெற்றார். மதுரையில் பிரபல ரவுடியாக வலம் வரும் பாபி சிம்ஹாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க துடிக்கும் சித்தார்த்தின் யதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.

மேலும் இப்படத்தில் அமைந்திருக்கும் லட்சுமி மேனனின் ஒரு தலைக்காதல், சந்தோஷ் நாராயணன் இசை என இப்படத்தில் கூடுதலான வெற்றிக்கு காரணம். இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதாநாயகி தேர்வு நடைபெறாத நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஜிகர்தண்டா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த பாபி சிம்ஹா ஜிகர்தண்டா 2 திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற நிலையில் கார்த்திக் சுப்புராஜிற்கும், பாபி சிம்ஹாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனிடையே வரும் அக்டோபர் மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் பேன் இந்தியா நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார் என்ற கூடுதல் தகவல் வெளியான நிலையில் அவர் யார் என்று தெரியாமல் சஸ்பென்ஸாக உள்ளது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம், மகான் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. பேட்ட படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை, இதனால் தோல்வி  இயக்குனரை கைப்பிடித்து தூக்கிவிட வதற்காக ராகவா லாரன்ஸ் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளாராம்.

இந்த நிலையில் ஜிகர்தண்டா 2 திரைப்படத்தை கண்டிப்பாக வெற்றி படமாக இயக்க வேண்டும் என்பதில் அவர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ஜிகர்தண்டா திரைப்படத்தை போலவே ஜிகர்தண்டா 2 திரைப்படமும் மாஸாக இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்