வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

விஜய் சேதுபதி இடத்தை பிடித்த ராகவா லாரன்ஸ்.. கையில் இத்தனை படங்களா?

சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் விஜய் சேதுபதி. ஆரம்ப காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு திரை உலகிற்கு வந்தாலும் இன்று சினிமாவில் முன்னணி நடிகராக வந்து விட்டார். தமிழில் மட்டுமல்லாமல் தற்போது ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவருடைய தனி சிறப்பு ஒரு வருடத்திற்கு 10, 12 படங்களில் கமிட்டாகி நடிப்பது தான்.

இதனை அடுத்து சமீபத்தில் வெளிவந்த படங்களில் கெஸ்ட் ரோல் மற்றும் வில்லன் ரோலிலும் நடித்து ஒரு மாஸ் ஹீரோவாக மாறிவிட்டார். ஆனால் இதுவே இவருக்கு பெரிய மைனஸ் ஆக அமைந்துவிட்டது. எப்படி என்றால் நடிகராக பார்த்த இவரை திடீரென்று அந்த மாதிரி கேரக்டரில் நடிப்பதால் இவருக்கு இருந்த மார்க்கெட் சரிய ஆரம்பித்துவிட்டது.

Also read: செங்கேணிக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி.. அரசை விட வேகமாக செயல்பட்ட ராகவா லாரன்ஸ்!

அதனால் இவருடைய இடத்தை ராகவா லாரன்ஸ் பிடித்துவிட்டார். இப்பொழுது இந்த வருடத்திற்கு மட்டும் எட்டு படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். இவர் ஏற்கனவே, புதுசா கதையை யோசிக்காமல் இவரின் வெற்றி படத்தையே மறுபடியும் எடுத்து நடக்கக்கூடியவர். இப்படி இருக்கையில் இவர் கையில் லட்டு மாதிரி எட்டு படங்கள் இருக்குன்னா சும்மாவா சொல்லணும். தியேட்டரை அதிர வைக்கிற அளவுக்கு ஆட்டம் சூடு பிடிக்க போகிறது.

அத்துடன் இவர் நடிக்க இருக்கும் படங்களை ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம். அடுத்த மாதத்தில் ரிலீசுக்கு தயாராகி உள்ள முதல் படம் “ருத்ரன்”. இதில் பிரியா பவானி சங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தை கதிரேசன் என்பவர் இயக்கியுள்ளார்.

Also read: லீக்கானது சந்திரமுகி 2-வின் ஒன் லைன் ஸ்டோரி.. வேட்டை மன்னாக மிரட்ட போகும் லாரன்ஸ் பராக் பராக்!

அடுத்ததாக “அதிகாரம்” இந்தப் படத்தின் கதையை எழுதியவர் வெற்றிமாறன். மேலும் இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார். இதனை அடுத்து சந்திரமுகி 2 படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை பி வாசு இயக்குகிறார். பின்பு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் தம்பி எல்வினுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.

அடுத்ததாக இவர் சொந்தமாக டைரக்ட் செய்ய போகும் காஞ்சனா 4. அதற்கு அடுத்து நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். பின்பு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் இதனைத் தொடர்ந்து ஒரு பேய் படத்தில் சுந்தர் சி மற்றும் லாரன்ஸ் சேர்ந்து நடிக்கப் போகிறார்கள். இப்படி தொடர்ந்து இதுவரை விஜய் சேதுபதி மட்டும் தான் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவரையே மிஞ்சும் அளவிற்கு இத்தனை படங்களை கையில் வைத்திருக்கிறார்.

Also read: சூர்யா, தனுசை பொசுக்குனு டம்மியாக்கிய ராகவா லாரன்ஸ்.. எல்லாம் பேய் ராசி!

- Advertisement -

Trending News