வளர்த்து விட்டவருக்கே வாய்ப்புக் கொடுத்து அழகு பார்க்கும் ராயன்.. செம மாஸாக வந்திருக்கும் போஸ்டர்

Raayan : தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை தானே நடித்து, இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ராயன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பக்கா சம்பவம் அடங்கி உள்ளதாக டைட்டில் போஸ்டரை பார்க்கும்போது தெரிந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் ஒவ்வொரு பிரபலங்களின் போஸ்டரையும் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் ராயன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைதளத்தில் இன்று தரமான சம்பவத்துடன் ஒரு போஸ்டரை வெளியிட்டு ஆச்சரியம் அளித்துள்ளது.

அதாவது ஏற்கனவே இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சுதீப் கிஷான் நடிப்பது உறுதி ஆகி இருந்தது. இதைத் தொடர்ந்து நேற்றையதினம் எஸ்ஜே சூர்யா இடம்பெறுகிறார் என்ற போஸ்டர் வெளியாகி இருந்தது. இப்போது தன்னை வளர்த்துவிட்ட அண்ணன் செல்வராகவனையும் ராயன் படத்தில் இணைத்துள்ளார்.

Also Read : யானை போல் தலையில் மண்ணை வாரி போடும் இயக்குனர்கள்.. தனுஷ் முதல் ஃபேமிலி ஆடியன்ஸை இழந்த 5 படங்கள்

அதாவது சினிமாவில் தனுஷ் வளர்வதற்கு காரணம் அவரது அண்ணன் செல்வராகவன் தான். அவருடைய இயக்கத்தில் தனுஷ் தொடர்ந்து பல ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறார். இப்போது தனுஷ் இயக்கும் படத்தில் முதல் முறையாக செல்வராகவன் நடிக்க இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு இயக்குனராக தனுஷிடம் இருந்து திறமையான நடிப்பை செல்வராகவன் வாங்கியுள்ளார். இப்போது தனுஷ் இயக்குனராக செல்வராகவன் இடமிருந்து சிறந்த நடிப்பை வாங்குகிறாரா என்பது ராயன் படம் வெளியானால் தான் தெரியும். தற்போது இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

selvaraghavan
selvaraghavan

Also Read : வடசென்னை போல் சம்பவத்திற்கு தயாரான தனுஷ்.. மரண மாஸாக வந்திருக்கும் D50 போஸ்டர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்